காற்றியக்கவியலில் ஒலித்தடை (Sound barrier) என்பது ஒரு வானூர்தி ஒலியொத்தவேகத்திலிருந்து மீயொலிவேகத்துக்கு மாறும் புள்ளியைக் குறிப்பதாகும். இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் இச்சொல் பிரபலமானது, அப்போது பல வானூர்திகள் அதிக வேகத்தில் செல்லும்போது அமுங்குமையின் விளைவுகளால் ஏற்படும் பல காரணிகள் ஒரு கட்டத்துக்கு மேல் வானூர்தி முடுக்கம் பெறுவதைத் தடைசெய்தன. 1950-களில் பற்பல வானூர்திகள் இந்த ஒலித்தடையை உடைத்து மீயொலிவேகத்தில் செல்ல ஆரம்பித்தன.

அமெரிக்க கடற்படையின் F/A-18 ஒலித்தடையை உடைத்துச் செல்கிறது. மீஒலி வேகத்தில் செல்லும் வானூர்தியைச் சுற்றி வளி அமுக்கம் குறைவதால் சுருங்கிய நீர்க்குமிழிகளால் வெள்ளை ஒளிவட்டம் உருவாகிறது.[1][2]
  1. குறைஒலி
  2. மாக் 1
  3. மிகைஒலி
  4. அதிர்வலை

குறிப்புதவிகள்

தொகு
  1. "APOD: 19 August 2007- A Sonic Boom." NASA. Retrieved: 30 August 2010.
  2. "F-14 Condensation cloud in action." web.archive.org..

உசாத்துணைகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலித்தடை&oldid=3237328" இலிருந்து மீள்விக்கப்பட்டது