ஒலிபீன் மாற்றும் தொழில்நுட்பம்
ஒலிபீன் மாற்றும் தொழில்நுட்பம் (Olefin Conversion Technology) என்பது புரோப்பலீனை எத்திலீன் மற்றும் 2-பியூட்டீனாகவும், எத்திலீன் மற்றும் 2-பியூட்டீனை புரோப்பைலீனாகவும் மாற்றும் ஒரு தொழிற்துறை செயல்முறை ஆகும். பிலிப்சு மூவொலிபீன் செயல்முறை என்ற பெயராலும் இச்செயல்முறை அழைக்கப்படுகிறது [1]. எத்திலீனிலிருந்து புரோப்பைலீன் தயாரிக்கும் செயல்முறை என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். ஒலிபீன் மாற்றும் தொழில்நுட்பச் செயல்முறையில் எத்திலீன் இருபடியாக்கம் செய்யப்பட்டு 1-பியூட்டீன் ஆக மாற்றப்படுகிறது. பின்னர் இது மாற்றியமாக்கலுக்கு உட்பட்டு 2-பியூட்டீன்களாக மாற்றப்படுகிறது. 2 பியூட்டீன் எத்திலீனுடன் இடம்பெயரல் வினைக்கு உட்படுகிறது.
இரேனியம் மற்றும் மாலிப்டினத்தைக் கொண்டிருக்கும் பல்லின வினையூக்கிகள் இவ்வினையில் பயன்படுத்தப்படுகின்றன. இப்பொழுதெல்லாம் தலைகீழ் வினைகள் மட்டுமே அதாவது எத்திலீன் மற்றும் 2-பியூட்டீனை புரோப்பைலீனாக மாற்றும் வினைகள் மற்றுமே செயல்படுத்தப்படுகின்றன:[2]
- CH2=CH2 + CH3CH=CHCH3 → 2 CH2=CHCH3.
பிலிப்சு பெட்ரோலியம் நிறுவனத்தில் ஆல்கீன்கள் மறுபகிர்வு அல்லது ஒலிபீன் இடம்பெயர்தல் செயல்முறையின் போது இத்தொழில் நுட்பம் கண்டறியப்பட்டது[3]. மாலிப்டினம் எக்சாகார்பனைல், தங்குதன் எக்சாகார்பனைல், அலுமினாவுடன் கூட்டாக மாலிப்டினம் ஆக்சைடு போன்றவை அசலாக விவரிக்கப்பட்ட செயல்முறையில் வினையூக்கிகளாகப் பயன்படுத்தப்பட்டன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Vincent Blay, Eva Epelde, Rubén Miravalles, Leo Alvarado Perea (2018). "Converting Olefins to Propene: Ethene to Propene and Olefin Cracking". Catalysis Reviews Science and Engineering 60. doi:10.1080/01614940.2018.1432017.
- ↑ Ghashghaee, Mohammad. "Heterogeneous catalysts for gas-phase conversion of ethylene to higher olefins". Rev. Chem. Eng.. doi:10.1515/revce-2017-0003.
- ↑ Banks, R. L.; Bailey, G. C. (1964). "Olefin Disproportionation. A New Catalytic Process". Industrial & Engineering Chemistry Product Research and Development 3 (3): 170–173. doi:10.1021/i360011a002.