1-பியூட்டீன்

வேதிச் சேர்மம்

1-பியூட்டீன் (1-Butene) என்பது C4H8 அல்லது CH3CH2CH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமச்சேர்மமாகும். நேரியல் ஆல்பா ஒலிபீனுக்கு உதாரணமான இச்சேர்மம் பியூட்டீனின் மாற்றியங்களில் ஒன்றாகும்[2]. எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும், எளிதில் ஒடுக்கமடையும் வாயுவாகவும் 1-பியூட்டீன் திகழ்கிறது.

1-பியூட்டீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்-1-யீன்[1]
வேறு பெயர்கள்
எத்திலெத்திலீன்
1-பியூட்டைலீன்
α-பியூட்டைலீன்
இனங்காட்டிகள்
106-98-9 Y
ChEBI CHEBI:48362 Y
ChEMBL ChEMBL117210 Y
ChemSpider 7556 Y
InChI
  • InChI=1S/C4H8/c1-3-4-2/h3H,1,4H2,2H3 Y
    Key: VXNZUUAINFGPBY-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H8/c1-3-4-2/h3H,1,4H2,2H3
    Key: VXNZUUAINFGPBY-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 7844
  • C=CCC
  • CCC=C
UNII LY001N554L Y
பண்புகள்
C4H8
வாய்ப்பாட்டு எடை 56.11 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
மணம் சிறிதளவு அரோமாட்டிக்
அடர்த்தி 0.62 கி/செ.மீ3
உருகுநிலை −185.3 °C (−301.5 °F; 87.8 K)
கொதிநிலை −6.47 °C (20.35 °F; 266.68 K)
0.221 கி/100 மி.லி
கரைதிறன் soluble in ஆல்ககால், ஈதர், பென்சீன் போன்றவற்றில் கரையும்.
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3962
பிசுக்குமை 7.76 பாசுக்கல்
தீங்குகள்
Autoignition
temperature
385 °C (725 °F; 658 K)
வெடிபொருள் வரம்புகள் 1.6-10%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

வினைகள்

தொகு

தன்னளவில் 1-பியூட்டீன் நிலைப்புத்தன்மை கொண்டிருக்கிறது. ஆனால் உடனடியாக பாலிபியூட்டீனாக பலபடியாகிறது. நேரியல் குறை-அடர்த்திபாலியேத்திலீன் போன்ற சிலவகையான பாலியெத்திலீன்களை தயாரிப்பதற்கு உதவும் இணை ஒருபடியாகப் பயன்படுவது 1-பியூட்டீனின் முக்கியமான பயனாகும். பாலிபுரோப்பைலீன் பிசின்கள், பியூட்டைலீன் ஆக்சைடு, பியூட்டனோன் போன்ற கரிமச் சேர்மங்கள் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகவும் இது பயன்படுகிறது[3] .

பேரளவில் தயாரித்தல்

தொகு

சுத்திகரிக்கப்படாத C4 சேர்மங்களை பிரித்தெடுக்கும் முறையிலும், எத்திலீனை இருபடியாக்கம் செய்தும் 1-பியூட்டீன் பேரளவில் தயாரிக்கப்படுகிறது. முதல் தயாரிப்பு முறையில் 1-பியூட்டீன் மற்றும் 2-பியூட்டீன் சேர்மங்களின் கலவை கிடைக்கிறது. இரண்டாவது தயாரிப்பு முறையில் விளிம்பு நிலை ஆல்க்கீன் மட்டுமே கிடைக்கிறது[4]. இதனைக் காய்ச்சி வடித்து அதி தூய 1-பியூட்டீன் தயாரிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் 12 பில்லியன் கிலோகிராம் 1-பியூட்டீன் தயாரிக்கப்பட்டதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது[5]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. pp. 17, 61, 374. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
  2. "1-BUTENE". Archived from the original on 2012-02-10. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
  3. "1-Butene product overview". Archived from the original on 2012-02-10. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-08. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
  5. "Butenes". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2014). Wiley-VCH. DOI:10.1002/14356007.a04_483.pub3. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-பியூட்டீன்&oldid=3755264" இலிருந்து மீள்விக்கப்பட்டது