ஒலிம்பிக் அருங்காட்சியகம்

சுவிட்சர்லாந்தின் லெசானில் உள்ள அருங்காட்சியகம்

ஒலிம்பிக் அருங்காட்சியகம் (பிரெஞ்சு மொழி: Musée olympique) என்பது சுவிட்சர்லாந்தின் லொசேனில் உள்ள விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் இயக்கம் தொடர்பான நிரந்தர மற்றும் தற்காலிக கண்காட்சிகள் கொண்ட அருங்காட்சியகமாகும். 10,000 இக்கும் மேற்பட்ட கலைப்பொருட்களைக் கொண்ட இந்த அருங்காட்சியகம் உலகிலேயே ஒலிம்பிக் விளையாட்டு நினைவுச் சின்னங்களின் மிகப்பெரிய காப்பகமாகும்.[1] மேலும் லொசானின் முதன்மையான சுற்றுலா தளத்தில் ஒன்றாக உள்ளது.[2] இந்த அருங்காட்சியகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 250,000 இக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கிறது.[3]

ஒலிம்பிக் அருங்காட்சியகம்
Musée olympique
முதன்மை வாயில்
Map
Interactive fullscreen map
நிறுவப்பட்டது23 சூன் 1993; 31 ஆண்டுகள் முன்னர் (1993-06-23)
அமைவிடம்லோசான், சுவிட்சர்லாந்து
ஆள்கூற்று46°30′31″N 6°38′2″E / 46.50861°N 6.63389°E / 46.50861; 6.63389
சேகரிப்பு அளவு10,000
வருனர்களின் எண்ணிக்கை250,000
நிறுவியவர்ஜுவான் அன்டோனியோ சமரன்ச்
வலைத்தளம்olympic.org
வார்ப்புரு:Infobox museum/ஒலிம்பிக் அருங்காட்சியகம் வலையமைப்பு
வார்ப்புரு:Infobox museum/ஒலிம்பிக் அருங்காட்சியகம் network

ஒலிம்பிக் அருங்காட்சியகமும், ஒலிம்பிக் பூங்காவும் (அருங்காட்சியகம் மற்றும் லேமன் ஏரிக்கு இடையே உள்ள சிற்பம் தோட்டம்) லாசேன் தெற்கில் உள்ள ஓச்சியில் அமைந்துள்ளது. பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் (ஐ. ஓ. சி.) தலைமையகம் ஓச்சியின் மேற்கில் உள்ள விடியில் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

இந்த அருங்காட்சியகம் 1993 சூன் 23 அன்று பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அப்போதைய தலைவர் ஜுவான் அன்டோனியோ சமரன்ச்சின் முயற்சியால் நிறுவப்பட்டது. மெக்சிகன் கட்டிடக் கலைஞர் பெட்ரோ ரமிரெஸ் வாஸ்குவேஸ், பன்னாட்டு ஒலிம்பிக் குழு உறுப்பினர் மற்றும் ஜீன்-பியர் கேஹென் ஆகியோர் இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பாக இருந்தனர். இந்த அருங்காட்சியகம் 1995 இல் ஆண்டின் ஐரோப்பிய அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டது.[3]

2012 மற்றும் 2013 இக்கும் இடையில் 23 மாத புதுப்பித்தல் பணிக்குப் பிறகு, ஒலிம்பிக் அருங்காட்சியகம் 21 திசம்பர் 2013 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. கட்டடத்தின் புதுப்பித்தல் பணியின் போது, ஒலிம்பிக் பூங்காவிற்கு முன்னால், சிஜிஎன் படகில் (Helvétie) ஒரு தற்காலிக கண்காட்சி அமைக்கப்பட்டது.

புதுப்பித்தலுக்குப் பிறகு, அருங்காட்சியகத்தின் மேற்பரப்பு 2,000 சதுர மீட்டரில் (22,000 சதுர அடி) இருந்து (2011 இல்) 3,000 சதுர மீட்டர் (32,000 சதுர அடி) ஆக (2013 இல்) அதிகரித்தது.

கண்காட்சிகள்

தொகு

இங்குள்ள நிரந்தர கண்காட்சியானது மூன்று தனித்தனி தளங்களில் மூன்று முக்கிய கருப்பொருள்களைக் கொண்டதாக அமைக்கபட்டுள்ளது; அவை ஒலிம்பிக் உலகம், ஒலிம்பிக் விளையாட்டுகள், ஒலிம்பிக் மெய்ப்பொருள் என்பனவாகும். மூன்றாவது மாடியில் நுழைந்தவுடன் கிரேக்கக் கடவுளான ஜீயசின் உருவம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலக பார்வையாளர்களுக்கு பண்டைய ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்று, 19 ஆம் நூற்றாண்டில் நவீன ஒலிம்பிக் விளையாட்டுகளின் துவக்கம் போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் சிறப்பம்சமாக ஒலிம்பிக் தீபங்களின் வரிசையும், தொடக்க விழாக்களின் வரலாற்றின் முக்கிய தருணங்களை ஆவணப்படுத்தும் காணொளிகளும் அடங்கும்.

இரண்டாவது தளம் ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் செலுத்துவதாக அமைக்கபட்டுள்ளது. பல்வேறு விளையாட்டுகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பார்வையாளர்களுக்கு . இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள்கள் மற்றும் இணை ஒலிம்பிக் விளையாட்டுகள் போன்றவை குறித்த அறிமுகங்கள் காணப்படுகின்றன. ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகள், விளையாட்டு வீரர்களின் 1,000 இக்கும் மேற்பட்ட காணொளித் காட்சிகளைப் பார்க்கலாம்.

நிரந்தர கண்காட்சியின் இறுதிப் பகுதி ஒலிம்பிக் மெய்ப்பொருளை உள்ளடக்கியது. அங்கு பார்வையாளர்கள் ஒலிம்பிக் சிற்றூரின் ஒரு பகுதியாக உணர வைக்கப்படுகிறார்கள். மற்றும் ஊடாடு பயிற்சிகள் மூலம் அவர்களின் சமநிலை, சுறுசுறுப்பு, மன திறன் ஆகியவற்றைச் சோதிக்க முடியும். அங்கு ஒலிம்பிக் பதக்கங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் பூங்கா

தொகு

விளையாட்டுக் கருப்பொருளைக் கொண்ட ஏராளமான கலைப் படைப்புகளை உள்ளடக்கிய ஒரு பூங்காவானது ஒலிம்பிக் பூங்காவை சூழந்து அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தின் நிரந்தர சேகரிப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க கலைப் படைப்புகளில் பிரெஞ்சு சிற்பிகளான அகஸ்டே ரோடினின் அமெரிக்க தடகள வீரர் மற்றும் நிகி டி செயிண்ட் ஃபாலேவின் லெஸ் கால்பந்து வீரர்கள், கொலம்பிய சிற்பி பெர்னாண்டோ போடெரோவின் ஜீன் ஃபில்லே அ லா பாலே, ஒரு ஹாக்கி தடி, ஒரு பன்றியின் தலை, ஒரு மோட்டார் பைக்கின் சக்கரம் ஆகியவற்றை இணைக்கும் சுவிஸ் சிற்பி ஜீன் டிங்குலியின் இயக்கவியல் கலை சிற்பம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

காட்சியகம்

தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. Natalie Leung (2008-03-13). "Free Olympics Archives Exhibit at Tap Seac Pavilion". Macau Daily Times. பார்க்கப்பட்ட நாள் 2008-03-21.
  2. Tom Wright (2005-05-02). "Literary Heyday Lingers in Lausanne". International Herald Tribune. பார்க்கப்பட்ட நாள் 2008-03-21.
  3. 3.0 3.1 "Olympic Museum Lausanne". Swiss News. 2002-08-01. பார்க்கப்பட்ட நாள் 2008-03-21.

வெளி இணைப்புகள்

தொகு