ஒலியொளிர்தல்

ஒலியொளிர்வு அல்லது ஒலியொளிர்தல் (sonoluminescence) என்பது அழுத்தமான ஒலிப்புலத்திற்கு உட்படுத்தப்பட்ட நீர்மத்தில் உள்ள குமிழிகள் ஒளி அலைகளை வெளியிடுதல் ஆகும்.

வரலாறு

தொகு

1934 ஆம் ஆண்டு இடாய்ச்சுலாந்தில் உள்ள கியோலோன் பல்கலைக்கழகத்தில் (University of Cologne) நடந்த ஒலியெதிர்வி (sonar) ஆய்வொன்றின் போது எச். ஃபிரன்செல் (H. Frenzel) மற்றும் எச். சூல்ட்டெசு (H. Schutes) ஆகியோர் இவ்விளைவைக் கண்டறிந்தனர். அவர்கள் அப்போது பல நீர்க்குமிழிகள் ஒளிர்வதைக் கண்டறிந்தனர். பல ஆராய்ச்சிகளுக்குப் பின் 1988 ஆம் ஆண்டு ஃபிலிப் கெய்டன் என்பவர் தனி நீர்க்குமிழி ஒன்றிலிருந்து ஒலியொளிர்வை நிகழ்த்திக் காட்;டினார்.

பண்புகள்

தொகு

ஒரு போதுமான அலை நீளமுள்ள ஒலியலை, நீரினுள் செலுத்தப்படும் போது அது எளிதில் உடையக் கூடிய வளிக்குமிழி (காற்றுக்குமிழி)யை உருவாக்குகிறது. ஆய்வகங்களில் ஒரே நீர்க்குமிழி மீண்டும் மீண்டும் தோன்றி மறையும் படி செய்ய முடிகிறது.

  • அழுத்தமான ஒலிப்புலத்திற்கு ஆளாக்கப்படும் போது இக் குமிழிகள் மிகக் குறுகிய காலத்திற்கு ஒளியை வெளியிடுகின்றன. (35 முதல் சில நூறு பிக்கோ நொடிகள்)
  • மந்த வாயுக்களைச் சேர்க்கும் போது ஒளிர்வின் செறிவு அதிகமாகிறது.
  • குமிழி வெப்பநிலை 2300 முதல் 5100 கெல்வின் வரை இருக்கும்.[1] (சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை - 5,8000 கெல்வின்)

உருவாகும் விதம்

தொகு
 
குமிழி உருவாதல், மெதுவாக விரிவடைதல், உடனடி மற்றும் குறுகிய கால உடைதல், ஒளிர்தல் (இடமிருந்து வலமாக)

உயிரியல் ஒலியொளிர்வு

தொகு

கடல் வாழ் இறால் வகையில் ஒன்றான அல்ஃபிடே குடும்ப இறால்கள் நீலத்திமிங்கலத்துக்கு அடுத்த படியாக கடலில் வாழும் அதிக இரைச்சலிடும் விலங்கு ஆகும். இது தனது நகங்களின் மூலம் துளை குமிழிகளை (குழிவுகளை) உருவாக்குகிறது.[2] இது 80,000 பாஸ்கல் அழுத்தத்தையும் 218 டெசிபல் அளவு ஒலியையும் உண்டாக்கக் கூடியது. இந் நிகழ்வின் போது ஒலியொளிர்வு நிகழ்கிறது. இந்த ஒளியொளிர்தல் வெறும் கண்களால் காண முடியாதது.[3] மேலும் இது மற்ற உயிரியல் ஒளிர்வுகளைப் போல முக்கியத்துவம் வாய்ந்ததும் அன்று.

மேற்கோள்கள்

தொகு
  1. Didenko, Y.T.; McNamara, III, W.B.; Suslick, K.S. (January 2000). "Effect of Noble Gases on Sonoluminescence Temperatures during Multibubble Cavitation". Physical Review Letters 84 (4): 777–780. doi:10.1103/PhysRevLett.84.777. பப்மெட்:11017370. Bibcode: 2000PhRvL..84..777D. 
  2. Detlef Lohse, Barbara Schmitz and Michel Versluis (2001). "Snapping shrimp make flashing bubbles". Nature 413 (6855): 477–478. doi:10.1038/35097152. பப்மெட்:11586346. 
  3. S. N. Patek and R. L. Caldwell (2005). "Extreme impact and cavitation forces of a biological hammer: strike forces of the peacock mantis shrimp". Journal of Experimental Biology 208 (Pt 19): 3655–3664. doi:10.1242/jeb.01831. பப்மெட்:16169943. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலியொளிர்தல்&oldid=2744857" இலிருந்து மீள்விக்கப்பட்டது