ஒலி பதிவு செய்யும் கருவி (விண்டோசு)
(ஒலி பதிவு செய்யும் கருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலி பதிவு செய்யும் கருவி (ஆங்கிலம்: Sound Recorder) எனப்படுவது மைக்ரோசாப்ட் விண்டோசுவில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒலி பதிப்பி மென்பொருளாகும். இந்த மென்பொருளின் விஸ்டா பதிப்பு அதிக நேரம் ஒலியைப் பதிவு செய்யக்கூடியதாக அமைந்திருந்தாலும் குறைந்த தெரிவுகளையே கொண்டுள்ளது.
ஒலி பதிவு செய்யும் கருவி (விண்டோசு) மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம். | |
---|---|
விண்டோஸ் எக்ஸ்பியில் ஒலி பதிவு செய்யும் கருவி | |
Details | |
வகை | ஒலி பதிப்பி மென்பொருள் |
சேர்த்திருக்கும் இயங்கு தளங்கள் | மைக்ரோசாப்ட் விண்டோசு |
வசதிகள்
தொகுஒலி பதிவு செய்யும் கருவி மூலம் நுணுக்குப்பன்னியைப் பயன்படுத்தி ஒலியைப் பதிவு செய்துகொள்ள முடியும். பதியப்பட்ட ஒலி .wav எனும் நீட்சியாகச் சேமிக்கப்படும். பதியப்பட்ட ஒலியின் அளவை மாற்றி அமைக்கவும் வேகத்தை மாற்றி அமைக்கவும் ஒலி பதிவு செய்யும் கருவி மென்பொருளைப் பயன்படுத்தவும் முடியும். பதியப்பட்ட ஒலியைப் பகுதிகளாகப் பிரிக்கவும் முடியும்.[1]