ஒல்லந்தாய்தாம்போ

இன்கா காலத்திய தொல்பொருள் தளம்

ஒல்லந்தாய்தாம்போ [1] [2] ( Ollantaytambo ) என்பது பெரு நாட்டின் குசுக்கோ நகரின் வடமேற்கே சாலை வழியாக 72 கிமீ (45 மை) தெற்கில் உள்ள ஒரு நகரம் மற்றும் இன்கா காலத்திய தொல்பொருள் தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,792 மீ (9,160 அடி) உயரத்தில், குசுக்கோ பிராந்தியத்தில் உள்ள உருபாம்பா மாகாணத்தின் ஒல்லண்டாய்டம்போ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இன்கா பேரரசின் போது, ஒல்லந்தாய்தாம்போ பேரரசர் பச்சகுட்டியின் அரச தோட்டமாக இருந்தது. அவர் இப்பகுதியை கைப்பற்றி,[3]:73 நகரத்தையும் ஒரு சடங்கு மையத்தையும் கட்டினார். பெருவை எசுப்பனியா கைப்பற்றிய நேரத்தில், இன்கா எதிர்ப்பின் தலைவரான மான்கோ இன்கா யுபான்கியின் கோட்டையாக இது செயல்பட்டது. இன்காக்களின் புனித பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இது, இன்கா இடிபாடுகள் மற்றும் இன்கா பாதை என அழைக்கப்படும் இது அதன் இருப்பிடத்தின் காரணமாக இப்போது ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக உள்ளது.

ஒல்லந்தாய்தாம்போ
உல்லந்தாய்தாம்போ
நகரம்
ஒல்லந்தாய்தாம்போ-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் ஒல்லந்தாய்தாம்போ
சின்னம்
ஒல்லந்தாய்தாம்போ is located in Peru
ஒல்லந்தாய்தாம்போ
ஒல்லந்தாய்தாம்போ
ஆள்கூறுகள்: 13°15′29″S 72°15′48″W / 13.25806°S 72.26333°W / -13.25806; -72.26333
Country பெரு
பிராந்தியம்குசுக்கோ
மாகானம்உருபம்பா
மாவட்டம்ஒல்லந்தாய்தாம்போ
அரசு
 • நகரத்தந்தைஜோஸ் ரியாஸ் கோரொனெல்
ஏற்றம்
2,792 m (9,160 ft)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்3,050
நேர வலயம்ஒசநே-5 (பெரு நேரம்)

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Protzen, Inca architecture, p. 19.
  2. Glave and Remy, Estructura agraria, p. 6.
  3. de Gamboa, P.S., 2015, History of the Incas, Lexington, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781463688653

மேலும் படிக்க

தொகு
தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்லந்தாய்தாம்போ&oldid=3831501" இலிருந்து மீள்விக்கப்பட்டது