ஒளிரெழிற்புள்

ஒளிரெழிற்புள் (Astrapia splendidissima) என்பது 39 செமீ நீளமான நடுத்தர அளவினதான கரிய சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இது மஞ்சட் பச்சைச் செதில்களையும், நீலப் பச்சை நிறத் தொண்டையையும், கடும் பச்சையான கீழ்ப் பகுதியையும், குறுகிய, அகன்ற, ஓரங்கள் கருமையான வெண்ணிற வால் இறகுகளையும் கொண்டிருக்கும். இவ்வினத்தின் பெண் பறவையானது கபில நிற இறகமைப்பையும் கருந்தலையையும் கொண்டிருக்கும்.

சிறிதே அறியப்பட்ட இவ்வெழிற்புள் மேலை நியூகினித் தீவின் நடுப் பகுதியில் உள்ள மலைசார் காடுகளிற் பரவிக் காணப்படும். இதன் முதன்மையான உணவுகள் பழங்களும், பூச்சிகளும், பல்லிகளும், தவளைகளுமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  • BirdLife International (2004). Astrapia splendidissima. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 12 May 2006. Database இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.

வெளித் தொடுப்புகள்

தொகு
  1. BirdLife International (2016). "Astrapia splendidissima". IUCN Red List of Threatened Species 2016: e.T22706215A94056657. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706215A94056657.en. https://www.iucnredlist.org/species/22706215/94056657. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிரெழிற்புள்&oldid=3603804" இலிருந்து மீள்விக்கப்பட்டது