ஒளிர்திரை(Fluoresent screen ) என்பது நோயறிகதிரியல் துறையில் பயன்படுகின்ற ஒரு முக்கியமான கருவியாகும்.வலுவூட்டும் திரை Intensifying Screen ) எக்சு கதிர் படம் எடுக்கும் போது படத்தாள் Cassette Box ) பெட்டில் பயன்படுத்தப் படுகிறத. கோட்பாட்டளவில் ஒளிர்திரை வலுவூட்டும்திரையும் ஒன்றுபோலவே உள்ளன.மருத்துவத்துறையில் காலத்தின் அருமை கருதி உடனேயே நோயாளியின் நிலையினை தெரிந்து கொள்ள வேண்டியது தேவைப்படலாம்.இதற்காக ஒளிர்திரையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு உள் உறுப்புகளின் இயக்கத்தினையும் கூட பார்க்கமுடியும்.கதிர்பட முறையினைவிட ஒளிர்திரையில் ஆய்வது அதிக கதிர் ஏற்பளவினை நோயாளிக்கும் பணியில் உள்ள அனைவருக்கும் கொடுக்கும்.ஒளிர் திரையானது சீரான ஓர் அட்டையில் உடனொளிர் பண்புடைய சிங் சல்பேட்,கேட்மியம் சிங் சல்பேட் போன்றவை பசை போன்ற வடிவில் சீராக பூசப்பட்டு இருக்கும்.நோயாளினைக் கடந்துசெல்லும் கதிர்கள் இத் திரையில் விழுந்து படத்தினைக் கொடுக்கிறது.திரையினையும் தாண்டி கதிர்கள் வெளிப்படக் கூடும் இக்கதிர்களைத் தடுக்க மெல்லிய ஈயம் கலந்த கண்ண1டி உள்ளது. இது மருத்துவரை வெளிப்படும் கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.திரையிலிருந்து வெளிப்படும் கதிர்கள் கண்களால் எளிதில் உணரும் வகையில் இருக்க வேண்டும்.அதற்கு ஏற்றவாற உடனொளிர் பொருட்கள் தேர்வு செய்யப்படுகின்றன இங்கு படம் மஞ்சள் பச்சை நிறத்தில் இருப்பது நல்லது.

 ஆனால் வலுவூட்டும் திரையில் ,அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் படத்தாளில்எளிதில் வினைப்பட்டு படத்தினைக் கொடுக்கும் வண்ணம் இருத்தல் வேண்டும்.படத்தாள் இளம் நீலநிறத்திற்கு அதிக உணர்திறனுடையதாக உள்ளன.
  கதிர்படம் எடுக்கும் போது, படத்தில் தெளிவின்மை குறைவாக இருத்தல் வேண்டும்.இதற்கு திரையில் பயன்படுத்தப் படும் உடனொளிர்தலை தோற்றுவிக்கும் படிகங்கள் சிறிதாக இருக்க வேண்டும்.அப்போது தெளிவான படிகம் கிடைக்கிறது.ஆனால் ஒளிர்திரையில் தெளிவான ஒளிமயமான படிமம் வேண்டும் இதற்கு திரையிலுள்ள படிகங்கள் பெரிதாக இருக்க வேண்டும்.
   ஒளிர்திரையில் பின்னும் ஒளிர்தல் பண்பு இருத்தல் கூடாது.இருப்பின் இயங்கும் நிலையிலுள்ள உறுப்புகளை தெளிவாக ஆராயமுடியாது.ஆனால் வலுவூட்டும் திலையில் சிறிது பின்னும் ஒளிர்தல் பண்பு இருந்தாலும் பாதிப்பு ஏதுமில்லை.மேலும் படத்தில் ஒப்புமை அதிகரிக்கும்.சிங் சல்பைட், சிங் கேட்மியம் சல்பைட் ஒளிர்திரையில் பயன்படுத்தப்படுகிறது.இதில் பச்சை வண்ணக்கதிர்கள் வெளிப்படுகின்றன.
   கேல்சியம் டங்சுடேற்று( ) லெட்சல்பேற்று ( ) வலுவூட்டும் திரையில் பயனாகிறது.இவை நீலவண்ண ஒளியினை கொடுக்கிறது.
   மேலே வலுவூட்டும் திரைக்கும் ஒளிர்திரைக்கும் உள்ள சில ஒப்புமைகள் விளக்கப்பட்டுள்ளன.
     
  
  
  
  
  
  
  
  பகுப்பு-கதிரியல்.
  உதவி-பி.ஏ.ஆர்.சி.குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிர்திரை&oldid=3602057" இலிருந்து மீள்விக்கப்பட்டது