ஒவுனென் மட்சுறி
ஒவுனென் மட்சுறி (豊年祭, Hounen Matsuri) மார்ச் 15 திகதி ஜப்பானில் கொண்டாப்படும் ஒரு புத்தியிர்ப்பு, இயற்கைசார் விழாவாகும். 豊年祭 ஒனென் மட்சுறி என வாசிக்கப்பட வேண்டும்.
கன் எழுத்து | -ஒன் வாசிப்பு | - குன் வாசிப்பு | - பொருள் |
豊 | - ஒவு | - யூதக | - முழுமை/சிறந்த |
年 | - னென் | - தொஷி | - வருடம் |
祭 | - சயி | - மட்சுறி | - விழா |
இந்த விழா கொமைகியில் (Komaki) உள்ள Tagata Jinja என்ற ஆலயத்தை பிரதானமாக வைத்து கொண்டாடப்படுகின்றது.
இவ்விழா ஜப்பானிய விழாக்களில் தனித்துவமானது. இந்த விழாவில் சடங்குகள், மது அருந்துதல், சிறப்பு உணவுவகைகள் என பல அம்சங்கள் இருந்தாலும், ஒரு பெரிய "மர ஆண்குறி"யை சுமந்து வீதி உலாவருவதே இவ்விழாவின் சிறப்பம்சம். Shinto சமயத்தில் இவ்வழக்கத்தை புத்தியிர்ப்புடனும் இயற்கையுடனும் இணைத்து பார்க்கின்றனர். இதை சிவலிங்கத்தை திருவிழாக்காலங்களில் தமிழர்கள் கோயில்களில் வீதி உலா எடுத்துவருவதுடன் ஒப்பிடலாம்.
இவ்விழாவை காணவென பல்லாயிரக்கணகான உல்லாசப்பயணிகள் இங்கு வருவது குறிப்பிடத்தக்கது.