ஒ. வெ. செ. மேல்நிலைப் பள்ளி, மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் ,மானாமதுரையில் இயங்கி வரும் மிகப் பழமையான பள்ளி ஒ. வெ.செ மேல்நிலைப்பள்ளி ஆகும். ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி என்பதன் முன்னெழுத்து குறியீடே ஒ.வெ.செ மேல்நிலைப்பள்ளி.

ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி
ஒ.வெ.செ மேல்நிலைப்பள்ளி
அமைவிடம்
மானாமதுரை, தமிழ் நாடு
இந்தியா
மாவட்டத் தகவல்
நிறுவப்பட்டது1921

வரலாறு தொகு

 
ஒ வெ செ மேல்நிலைப்பள்ளி முன்புற தோற்றம்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மானாமதுரை மேல்கரையில் கொரட்டி கருப்பண்ணசாமி கோவில் அருகே குப்பண்ண அய்யங்கார் என்பவர் ஹையர் எலிமெண்டரி ஸ்கூல் ஒன்றை நடத்தி வந்தார். அதே காலகட்டத்தில் சீனிவாச அய்யங்கார் என்பவர் ஹிந்து செகண்டரி ஸ்கூல் என்ற மிடில் ஸ்கூல் ஒன்றை அதன் அருகே நடத்திவந்தார். இப்பள்ளியை சீனிவாச ஐயங்காரிடம் இருந்து ஒக்கூரை சேர்ந்த சி.கரு.சி.கரு.வெள்ளையன் செட்டியாரின் மூத்த புதல்வர் ராவ்சாகேப் சிந்தாமணி செட்டியார் 1921இல் விலைக்கு வாங்கி "ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் ஹைஸ்கூல்" என்று தம் தந்தையின் பெயரால் நடத்திவந்தார். இதே காலகட்டத்தில் மானாமதுரை கீழ்கரையில் "வித்யாபிவிருத்தி சங்கம்" என்ற பெயரில் நடந்துவந்த ஆரம்பப் பள்ளியையும் வாங்கி இவரே நடத்தி வந்தார். 2 வருடம் கழித்து குப்பண்ண அய்யங்கார் பள்ளி நடத்தப்படாமல் மூடப்பட்டது. அதன் காரணமாக மேல்கரையில் தொடக்கப்பள்ளி இல்லாத குறையைப் போக்க தெற்கு ரதவீதி மேல்கோடியில்  'ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் தொடக்கப்பள்ளி மேற்கு' என்ற பெயரில் மற்றொரு தொடக்கப் பள்ளியைத் துவக்கினார். பிற்பாடு குப்பண்ண அய்யங்கார் பள்ளிக் கட்டிடம் பயன்படுத்தப் படாமல் இருந்ததால் தொடக்கப் பள்ளி அவ்விடத்திற்கு மாற்றப்பட்டது.[1]

1928 வாக்கில் தற்போதைய மேல்நிலைப்பள்ளி இருக்கும் இடம் வாங்கப்பட்டு ராவ்சாகேப் சி.கரு.சி.கரு.வெ.சிந்தாமணி செட்டியாரின் சகோதரர் சி.கரு.சி.கரு.வெ.ஆதப்ப செட்டியாரால் சுமார் ரூ.87,000 செலவில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 25.4.1935இல் அன்றைய மெட்ராஸ் மாகாண கல்வி அமைச்சர் திவான் பகதூர் குமாரசாமி ரெட்டியாரால் திறந்து வைக்கப்பட்டு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.[1]

பெருமைகள் தொகு

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் சகோதரர் சி. விசுவநாத ஐயர் தலைமையாசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரிய பள்ளி இது.[2] [3] இப்பள்ளிக்காக "வாரீர் நம்பள்ளிதனை வந்திப்போம் - அனு தினமும்" எனத் தொடங்கும் பள்ளி வாழ்த்து தன்னை இயற்றியுள்ளார்[4]

● 1920களில் ஒருங்கிணைந்த இராமநாதபுர மாவட்டத்தில் இப்பள்ளியைச் சேர்த்து மொத்தம் 12 உயர்நிலைப் பள்ளிகள்தான் இருந்தன.[1]

● இப்பகுதியிலேயே அழகிலும், அமைப்பிலும் சிறந்ததாக, ஐந்து ஏக்கர் பரப்பளவு உள்ள விளையாட்டு மைதானத்துடன் இப்பள்ளி அமைந்துள்ளது.

● பள்ளி கட்டிடத்தை வானில் இருந்து பார்த்தால் வானூர்தி வடிவில் தோற்றம் இருக்கும்.[1]

சங்கமம் அறக்கட்டளை தொகு

மானாமதுரை, சங்கமம் அறக்கட்டளை என்னும் அமைப்பு ஆண்டுதோறும் விழா நடத்தி, இந்தப் பள்ளி மாணவ மாணவியரின் கல்வி, கலைத் திறன்களைப் பாராட்டிப் பரிசு வழங்கி ஊக்குவித்து வருகிறது.[5] [6]

நூற்றாண்டு விழா தொகு

2022 ஆகஸ்ட் 20 அன்று ஒ.வெ.செ பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பான சங்கமம் அறக்கட்டளை சார்பில் பள்ளி வளாகத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நூற்றாண்டு மலரை சங்கமம் அறக்கட்டளை நிர்வாகிகள் வெளியிட தமிழக பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் பெற்றுக்கொண்டார்.[7]

மேற்கோள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 ""நமது செட்டிநாடு" மாதஇதழ் (ஜனவரி-2021) 'நூற்றாண்டு கண்ட ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி - பழ.கைலாஷ்'. பக் - 17". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "ஒரு பெரியவரின் தரிசனம்". Dinamalar. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. சி.விசுவநாத ஐயர் https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2023/jul/16/my-teacher-viswanatha-iyer-4038845.html
  4. ஒ.வெ.செ பள்ளி கையேடு
  5. "சங்கமம் அறக்கட்டளை- தினமலர்". Dinamalar. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. https://sangamamarakkattalai.godaddysites.com/
  7. "தினமலர்". சிவகங்கை மாவட்டம். 22-08-2022.