ஓக்ரம் இபோபி சிங்

இந்திய அரசியல்வாதி மற்றும் மேனாள் மணிப்பூர் முதலமைச்சர்

ஓக்ரம் இபோபி சிங் (Okram Ibobi Singh, பிறப்பு சூலை 19, 1948) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் முன்னாள் முதலமைச்சர். மார்ச்சு 7,2002 முதல் மார்ச்சு 15,2017 வரை இப்பதவியில் இருந்துள்ளார். காங்கிரசுக் கட்சி உறுப்பினர்.[1].

ஓக்ரம் இபோபி சிங்
11வது மணிப்பூர் முதலமைச்சர்
பதவியில்
7 மார்ச்சு 2002 – 15 மார்ச்சு 2017
முன்னவர் ராதா பினோத் கோய்ஜம்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 19, 1948 (1948-07-19) (அகவை 75)
தூபல் அதோக்பம், வடகிழக்கு இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

இளமை தொகு

ஓக்ரம் அங்குபி மற்றும் லுகாமணி தேவிக்கு மகனாக 1948ஆம் ஆண்டு சூலை 19 அன்று தூபல் அதோக்பம் என்றவிடத்தில் பிறந்தார். இவரது மனைவியும் 2007ஆம் ஆண்டு தேர்தல்களில் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2].

கொலை முயற்சி தொகு

செப்டம்பர் 2, 2008 அன்று மாநில போராட்டக்காரர்கள் சிலர் இவரது வீட்டை எறிகணை வீச்சு கொண்டு தாக்கினர். வீட்டின் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த ஓக்ரம் சிங் மற்றும் அவரது மனைவி தப்பித்தனர். காவலர் ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்கியவர்கள் இதுவரை பிடிபடவில்லை.[3] தொலைபேசி மூலம் காங்கலெய்பக் மக்கள் புரட்சி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் இதற்கு உரிமை கோரினார்; மணிப்பூரில் புரட்சியைத் தடுக்கும் விதமாக திட்டங்களை நிறைவேற்றாதிருக்க முதல்வருக்கு ஓர் எச்சரிக்கை இது எனக் கூறினார்.[4]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓக்ரம்_இபோபி_சிங்&oldid=3628828" இருந்து மீள்விக்கப்பட்டது