ஓசுமியம்(III) குளோரைடு

வேதிச் சேர்மம்

ஓசுமியம்(III) குளோரைடு (Osmium(III) chloride) என்பது OsCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

ஓசுமியம்(III) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
முக்குளோரோ ஓசுமியம், ஓசுமியம் முக்குளோரைடு
இனங்காட்டிகள்
13444-93-4 நீரிலி
14996-60-2 முந்நீரேற்று
ChemSpider 75306
EC number 236-587-7
InChI
  • InChI=1S/3ClH.Os/h3*1H;/q;;;+3/p-3
    Key: UAIHPMFLFVHDIN-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83468
  • Cl[Os](Cl)Cl
பண்புகள்
Cl3Os
வாய்ப்பாட்டு எடை 296.58 g·mol−1
தோற்றம் கரும் பழுப்பு படிகங்கள்
உருகுநிலை 560 °C (1,040 °F; 833 K)
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஓசுமியம் தனிமத்துடன் குளோரினைச் சேர்த்து வினைபுரிட்யச் செய்தால் ஓசுமியம்(III) குளோரைடு' உருவாகும்.

2Os + 3Cl2 → 2OsCl3

ஓசுமியம் நாற்குளோரைடு சேர்மத்தை சூடுபடுத்தினாலும் ஓசுமியம்(III) குளோரைடு' உருவாகும்.:

2OsCl4 → 2OsCl3 → Cl2

இயற்பியல் பண்புகள்

தொகு
 
ஓசுமியம்(III) குளோரைடு நீரேற்றின் வர்த்தக மாதிரி உப்பு

ஓசுமியம்(III) குளோரைடு கருப்பு-பழுப்பு நிற படிகங்களாக உருவாகிறது.[1]

நீரை உறிஞ்சி OsCl3·3H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு நீரேற்றாக ஓசுமியம்(III) குளோரைடு அடர் பச்சை நிறப் படிகமாக மாறுகிறது.[2]

பயன்கள்

தொகு

ஓசுமியம்(III) குளோரைடு நீரேற்றானது இருகுளோரோயீரைதரினோ ஓசுமியம் என்ற் அணைவுச்சேர்மம் மற்றும் பிற ஓசுமியம் சேர்மங்களின் உற்பத்திக்கு ஒரு முன்னோடி வேதிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]

பல்வேறு அரீன் அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கும் இது ஒரு முன்னோடிச் சேர்மமாகும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Osmium(III) chloride" (in ஆங்கிலம்). heraeus.com. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
  2. "Osmium(III) chloride hydrate, Thermo Scientific Chemicals | Fisher Scientific". fishersci.se. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
  3. "Osmium(III) chloride hydrate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
  4. Bell, Andrew G.; Koźmiński, Wiktor; Linden, Anthony; von Philipsborn, Wolfgang (1996). "187Os NMR Study of (η6-Arene)osmium(II) Complexes: Separation of Electronic and Steric Ligand Effects". Organometallics 15 (14): 3124–3135. doi:10.1021/om960053i. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுமியம்(III)_குளோரைடு&oldid=3789185" இலிருந்து மீள்விக்கப்பட்டது