ஓசுமியம் எழுபுளோரைடு

வேதிச் சேர்மங்கள்

ஓசுமியம் எழுபுளோரைடு (Osmium heptafluoride) என்பது OsF7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3] முதன்முதலில் 1966 ஆம் ஆண்டில் 600 ° செல்சியசு வெப்பநிலையில் 400 வளிமண்டல் அழுத்தத்திக்ல் புளோரின் மற்றும் ஓசுமியம் ஆகியவை வினைபுரிந்ததால் ஓசுமியம் எழுபுளோரைடு உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.[4] ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளால் இந்த சேர்மத்தை மீண்டும் உருவாக்க முடியவில்லை.[5]

ஓசுமியம் எழுபுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஓசுமியம்(VII) புளோரைடு
இனங்காட்டிகள்
16949-69-2
InChI
  • InChI=1S/7FH.Os/h7*1H;/q;;;;;;;+7/p-7
    Key: PYLQBEQBIUJFFB-UHFFFAOYSA-G
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • F[Os](F)(F)(F)(F)(F)F
பண்புகள்
F7Os
வாய்ப்பாட்டு எடை 323.22 g·mol−1
கட்டமைப்பு
படிக அமைப்பு ஐங்கோண இரட்டைப்பட்டகக் கூம்பு (கணக்கீடு)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இயற்பியல் பண்புகள் தொகு

ஓசுமியம்(VII) புளோரைடு நீல-மஞ்சள் நிறத்தில் நீருறிஞ்சும் பொருளாக உருவாகிறது. மிகவும் நிலைப்புத்தன்மையற்று காணப்படுகிறது.[6] -100 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையத் தொடங்குகிறது.[7] திரவ நைட்ரசனின் வெப்பநிலையில் ஒரு நிக்கல் பாத்திரத்தில் இதை சேமிக்க வேண்டும்.

வேதிப்பண்புகள் தொகு

ஓசுமியம் எழுபுளோரைடை சிறிதளவு சூடாக்கினால் சிதைவடைந்து ஓசுமியம் அறுபுளோரைடாக மாறுகிறது.

2OsF7  → 2OsF6 + F2

மேற்கோள்கள் தொகு

  1. Bayerische Julius-Maximilians-Universität Würzburg (2006). The Highest Oxidation States of the 5d Transition Metals: a Quantum-Chemical Study (PDF) (Report). Chemical Society. பார்க்கப்பட்ட நாள் 2011-06-20.
  2. "WebElements Periodic Table » Osmium » osmium heptafluoride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
  3. Hawkins, Donald T. (6 December 2012) (in en). Binary Fluorides: Free Molecular Structures and Force Fields A Bibliography (1957–1975). Springer Science & Business Media. பக். 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4684-6147-3. https://books.google.com/books?id=kOHgBwAAQBAJ&dq=osmium+heptafluoride&pg=PA42. பார்த்த நாள்: 19 April 2023. 
  4. Glemser, Oskar; Roesky, Herbert W.; Hellberg, Karl‐Heinz; Werther, Heinz‐Ulrich (1966). "Darstellung und Eigenschaften von Osmiumheptafluorid". Chemische Berichte (Wiley) 99 (8): 2652–2662. doi:10.1002/cber.19660990834. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2940. 
  5. Shorafa, Hashem; Seppelt, Konrad (1 September 2006). "Osmium(VII) Fluorine Compounds". Inorganic Chemistry 45 (19): 7929–7934. doi:10.1021/ic0608290. பப்மெட்:16961386. https://pubs.acs.org/doi/10.1021/ic0608290. 
  6. Edwards, A. J. (1 November 1983). "Structures of the binary fluorides" (in en). Advances in Inorganic Chemistry (Academic Press) 27: 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780080578767. https://books.google.com/books?id=W4RngLN275wC&dq=osmium+heptafluoride&pg=PA108. பார்த்த நாள்: 19 April 2023. 
  7. Edwards, A. J. (1 November 1983). "Structures of the binary fluorides" (in en). Advances in Inorganic Chemistry (Academic Press) 27: 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780080578767. https://books.google.com/books?id=W4RngLN275wC&dq=osmium+heptafluoride&pg=PA108. பார்த்த நாள்: 19 April 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுமியம்_எழுபுளோரைடு&oldid=3790442" இலிருந்து மீள்விக்கப்பட்டது