ஓடி விளையாடு பாப்பா
ஓடி விளையாடு பாப்பா (Odi Vilaiyaadu Paapa) என்பது 1959இல் வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். இப்படத்தை முக்தா சீனிவாசன் இயக்கியிருந்தார். இப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், சரோஜாதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]
ஓடி விளையாடு பாப்பா | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
கதை | கே. அப்பன்னராஜ் |
இசை | வி. கிருஷ்ணமூர்த்தி |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் சரோஜாதேவி |
ஒளிப்பதிவு | சம்பத் ஈ. என். பாலகிருஷ்ணன் |
கலையகம் | ஜெகஜோதி பிலிம்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 25, 1959 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு"சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு" என்பதிலிருந்து:
- சுப்பிரமணியனாக எஸ். எஸ். ராஜேந்திரன்
- பாரதியாக சரோஜாதேவி
- பி. கே. பாலசந்திரன்
- ஜி. சகுந்தலா
- கே. மோகன்
- சாந்தி
- சகாதேவன்
- அங்கமுத்து
- எஸ். வி. சகஸ்ரநாமம்
- கே. வரலட்சுமி
தயாரிப்பு
தொகுபடத்தின் தலைப்பு தமிழ் கவிஞன் சுப்பிரமணிய பாரதி எழுதிய கவிதை மூலம் அதன் பெயரைப் பகிர்ந்து கொள்கிறது.[2] இப்படத்தின் இயக்குநர் வி. சீனிவாசன் பின்னர் முக்தா சீனிவாசன் என்று பிரபலமாக அறியப்பட்டார். ஜகத்ஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்தது. கதை மற்றும் வசனங்களை கே. அப்பன்னராஜ் எழுதியுள்ளார். ஒளிப்பதிவை சம்பத் மற்றும் ஈ.என்.பாலகிருஷ்ணன் ஆகியோர் கையாண்டனர். கலை இயக்குனர் அங்கமுத்து, ஆசிரியர் என். ஜி. ராஜன், இசை இயக்குனர் வி.கிருஷ்ணமூர்த்தி, பாடல்களை கம்பதாசன் எழுதியிருந்தார். பாரதியார் இப்படத்தின் பாடலாசிரியராகவும் புகழ் பெற்றார். படத்தின் நீளம் 14,517 அடி (4,425 மீ).
ஒலிப்பதிவு
தொகுபடத்துக்கு வி.கிருஷ்ணமூர்த்தி இசையமைத்தார். பாடல்களைசுப்பிரமணிய பாரதியார் , கம்பதாசன் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். பின்னணி பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், ராதா ஜெயலட்சுமி, எஸ்.ஜானகி , பி.சுசீலா ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர்.
வெளியீடும் வரவேற்பும்
தொகுஇந்தப் படம் 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று வெளியிடப்பட்டு, வணிக ரீதியாக தோல்வியுற்றது.[3] "நாரதா" என்ற பத்திரிகையின் ஆசிரியர் சீனிவாச ராவ், இயக்குநர் சீனிவாசன் தனது திறமையைக் காட்டுவதற்காக இந்தப் படத்தை இயக்கியதற்காக விமர்சித்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1959 – ஓடி விளையாடு பாப்பா- ஜெகத் ஜோதி பிலிம்ஸ்" [1959 – Odi Vilaiyaadu Paapa- Jagajothi Films.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 17 March 2017. பார்க்கப்பட்ட நாள் 17 March 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Shastry (1964). Contemporary Indian Literature.
- ↑ "அன்றிலிருந்து இன்றுவரை சினிமா" [Cinema, from then to now] (PDF). Vlambaram. 1 May 1999. p. 7.
- ↑ "நிலைத்து நின்ற ‘முக்தா’ சீனிவாசன்!". தினமலர் (Nellai). 4 June 2018 இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201103182601/http://www.dinamalarnellai.com/cinema/news/50394.