ஓட்டோ திம்ரோத்
செருமானிய வேதியியலாளர்
ஓட்டோ திம்ரோத் (Otto Dimroth) செருமன் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். 1872 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 அன்று இவர் பிறந்தார். 1909 ஆம் ஆண்டு திம்ரோத் கண்டுபிடித்த திம்ரோத் மறுசீராக்கல் என்ற கரிம வேதியியல் வினைக்காக இவர் நன்கு அறியப்படுகிறார் [1][2]. இதை தவிர உட்புறம் இரட்டை சுழல் கொண்ட திம்ரோத் மின்தேக்கி என்ற ஒரு வகை மின்தேக்கிக்காகவும் இவர் பெயர் பெற்றவர் ஆவார். 1940 ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் இவர் இறந்தார்.
ஓட்டோ திம்ரோத் Otto Dimroth | |
---|---|
பிறப்பு | 28 மார்ச்சு 1872 பெய்ருத், செருமானியப் பேரரசு |
இறப்பு | 16 மே 1940 ஆசுசாப்பென்பர்க் , செருமனி | (அகவை 68)
வாழிடம் | செருமனி |
தேசியம் | செருமனி |
பணியிடங்கள் | கிரிப்சுவால்டு பல்கலைக்கழகம், மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம், உர்சுபர்க் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | யோகான்சு திசுலே |
ஓட்டோ திம்ரோத்தின் மகன் காரல் திம்ரோத்தும் புகழ்பெற்ற ஒரு வேதியியலாளர் ஆவார். இவர் 3-பென்சாக்செபின் என்ற பல்லினவளையச் சேர்மத்தைக் கண்டறிந்தார் [3][4].
மேற்கோள்கள்
தொகு- ↑ D. Otto (1909). "Ueber intramolekulare Umlagerungen. Umlagerungen in der Reihe des 1, 2, 3-Triazols". Justus Liebig's Annalen der Chemie 364 (2): 183–226. doi:10.1002/jlac.19093640204. https://zenodo.org/record/1427579.
- ↑ W. M. Otto Dimroth (1927). "Intramolekulare Umlagerung der 5-Amino-1,2,3-triazole". Justus Liebig's Annalen der Chemie 459 (1): 39–46. doi:10.1002/jlac.19274590104.
- ↑ Dimroth, K.; Pohl, G. (1961). "3-Benzoxepin". Angew. Chem. 73 (12): 436. doi:10.1002/ange.19610731215.
- ↑ Dimroth, K.; Pohl, G.; Follmann, H. (1966). "Die Synthese von Derivaten des 3-Oxepins und des Furans durch eine zweifache Wittig-Reaktion" (in German). Chem. Ber. 99 (2): 634–641. doi:10.1002/cber.19660990238.