ஓமி பாபா பதக்கமும் பரிசும்

ஓமி பாபா பதக்கமும் பரிசும் (Homi Bhabha Medal and Prize) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்திய விருதாகும் இது தூய மற்றும் பயன்பாட்டு இயற்பியல் பன்னாட்டு ஒன்றியம் மற்றும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக வழங்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டில் ஓமி ஜே. பாபா நினைவாக நிறுவப்பட்ட இந்த விருது பெறுவோருக்குச் சான்றிதழும், பதக்கமும், 250,000 இந்திய ரூபாய் விருதும் மும்பையில் உள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்திலும் ஊட்டியில் உள்ள அண்டக் கதிர் ஆய்வகத்தில் பொது சொற்பொழிவாற்ற ஆதரவும் வழங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா வருடாந்திரப் பன்னாட்டு அண்டக் கதிர் மாநாட்டின் போது நடைபெறுகிறது. "உயர் ஆற்றல் அண்டக் கதிர் இயற்பியல் மற்றும் வானியற்பியல் துறையில் நீண்ட கல்வி வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி பணியில் உள்ள விஞ்ஞானி" இந்த விருதைப் பெறுவார். முதல் விருது 2011இல் சர் அர்னால்ட் வொல்பெண்டேலுக்கு வழங்கப்பட்டது.[1][2]

இயற்பியலாளர் ஓமி ஜே. பாபாவின் நினைவாகப் பெயரிடப்பட்ட பல்வேறு விருதுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஓமி பாபா பதக்கம் (ஐந்து வெவ்வேறு பிரிவுகளில்) இந்திய அரசின் அணுசக்தித் துறையின் அணு எரிபொருள் வளாகத்தால் வழங்கப்படுகிறது.[3]

விருது பெற்றோர்

தொகு
ஆண்டு விருது பெற்றோர் நிறுவனம்
2011 சர் அர்னால்ட் வொல்பெண்டேல் துர்காம் பல்கலைக்கழகம், துர்காம், இங்கிலாந்து
2013 கெயின்சு வோல்க் (தி) அணு இயற்பியலுக்கான மேக்சு பிளாங்க் நிறுவனம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி
2015 தாமசு கே. கெய்சர் பார்டோல் ஆராய்ச்சி நிறுவனம், டெலாவேர் பல்கலைக்கழகம், அமெரிக்கா
2017 சுபீர் சர்க்கார் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து & நீல்சு போர் நிறுவனம், கோபன்ஹேகன், டென்மார்க்
2019 தகாகி கஜிதா அண்டக் கதிர் ஆராய்ச்சி நிறுவனம்டோக்கியோ பல்கலைக்கழகம், சப்பான்
2021 பிரான்சிசு கால்சன் விஸ்கான்சின் பல்கலைக்கழகம், மாடிசன், அமெரிக்கா
2023 சாமுவேல் சி. சி. திங் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "IUPAP-TIFR Homi Bhabha Medal and Prize".
  2. "Homi Bhabha Medal and Prize, C4: Awards - IUPAP: The International Union of Pure and Applied Physics".
  3. "Homi Bhabha Medal Winners". Nuclear Fuel Complex, Government of India.