ஓம் நமோ நாராயணாய

(ஓம் நமோ நாராயணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஓம் நமோ நாராயணாய (சமசுகிருதம்: ॐ नमो नारायणाय, (பொருள்:பரம்பொருளான நாராயணனை வணங்குகிறேன்) இந்து சமயத்தில் ஓம் நமோ நாராயணா எனும் எட்டெழுத்து மந்திரம் வைணவர்களால் சிறப்பாக போற்றப்படுகிறது.[1] திருபாற்கடலில் யோக நித்திரையில் இருக்கும் விஷ்ணுவின் வடிவமான, காக்கும் கடவுள் நாராயணணை நோக்கி அழைக்கப்படும் ஒரு வேண்டுகோள்.[2]

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கோபுரத்தின் முகப்பில் ஓம் நமோ நாராயணா எனும் எட்டெழுத்து மந்திரம்
நாராயணனின் சிற்பம்
தேவநாகரி எழுத்தில் ஓம் நமோ நாராயாணா எனும் மந்திரம்

தோற்றம்

தொகு

சாம வேதத்தில், ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரத்தை வேத கால முனிவர்களால், ஞானம் பெற வந்தவர்களுக்கு கற்பித்ததாகக் கூறப்படுகிறது. இந்த மந்திரம் முனிவர்களின் தவம் மூலம் அதன் முக்கியத்துவத்தையும், பொருளையும் வெளிப்படுத்தியதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது. பின்னர் இம்மந்திரத்தை சுய-உணர்தலுக்கான வழிமுறையாக அதை தேடுபவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.[3]

இலக்கியம்

தொகு

ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரம் இந்து சமய இலக்கியங்களில், குறிப்பாக வேதம், வைணவ உபநிடதங்கள் மற்றும் புராணங்களில் பெரிதும் இடம் பெற்றுள்ளது. தெய்வத்திடமிருந்து இரட்சிப்பைப் பெறுவதற்காகவும், சடங்குகளை நிறைவேற்றுவதில் பக்தர்களால் இந்த மந்திரம் உச்சரிக்கப்படுகிறது.[4]

தாராசர் உபநிடதத்தில்[5] ஓம் என்பது என்றும் மாறாத மற்றும் நித்திய வஸ்துவான பிரம்மத்தை குறிக்கும், நமோ எனில் வணக்கம் செலுத்துதலைக் குறிக்கும், நாராயணாய என்பது "நாராயணன்" எனில் நாராயணனுக்கு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

நாராயண உபநிடதத்தில் ஓம் நமோ நாராயணா மந்திரத்தின் பெருமை விளக்கப்படுகிறது.[6][7]சிறுவன் பிரகலாதனின் ஓம் நமோ நாராயணா எனும் மந்திரத்தின் மகிமையால், பகவான் விஷ்ணு, நரசிம்ம அவதாரம் கொண்டு இரணியகசிபுவை கொன்று, சிறுவன் பிரகலாதனை காத்தார்.[8]

சமசுகிருத மொழியில் நாரா எனில் "தண்ணீரைக் குறிக்கிறது. மேலும் அனயா என்றால் தங்குமிடம். நாராயணா என்பது விஷ்ணுவின் அடைமொழியாகும். வான மண்டலத்தில் வைகுண்டம், பிரபஞ்ச நீர் மத்தியில் உள்ளது. எனவே ஓம் நமே நாராயணாய எனில் நாராயணன் எனும் கடவுளுக்கு அடிபணிதல், பிரமாண்டமான வடிவமைப்பில் ஒருவரின் இருப்பை ஏற்றுக்கொள்வது மற்றும் விஷ்ணுவின் பாதுகாப்பைத் தேடுவது ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு மந்திரமாகும்.[9]

முனிவரும், தத்துவஞானியுமான யாக்யவல்க்கியர் ஓம் நமோ நாராயணா எனும் மந்திரத்தை கீழ் கண்டவாறு பிரித்து விளக்குகிறார். [10]

சொற்குறியிடு குறியீட்டியல் வணக்க வழிபாடு
ஓம் ஆன்மா பிரம்மம்
ந/மா பிரகிருதி விஷ்ணு/சிவன்
நா/ரா/யா/நா/யா (Na/Ra/Ya/Na/Ya) பரப்பிரம்மன் ஈஸ்வரன்/பகவான்/இரண்யகர்பன்/புருச தத்துவம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Krishnamurthy, V. (2018-05-16). Thoughts of Spiritual Wisdom. Notion Press. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1642499018.
  2. Werner, Karel (2013-12-16). Love Divine: Studies in 'Bhakti and Devotional Mysticism (in ஆங்கிலம்). Routledge. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-77468-3.
  3. Debroy, Bibek (2022-01-24). Brahma Purana Volume 1 (in ஆங்கிலம்). Penguin Random House India Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-91149-73-4.
  4. Makarand Joshi. Varaha Purana ENG 2 Volumes In 1 File OCR Motilal Banasirdass 1960.
  5. Tarasara Upanishad
  6. 108 Upanishad.
  7. 108 Upanishad.
  8. Muthukumaraswamy, M. D.; Kaushal, Molly (2004). Folklore, Public Sphere, and Civil Society (in ஆங்கிலம்). NFSC www.indianfolklore.org. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-901481-4-6.
  9. Werner, Karel (2013-12-16). Love Divine: Studies in 'Bhakti and Devotional Mysticism (in ஆங்கிலம்). Routledge. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-77468-3.
  10. Narayanasvami Aiyar, K. (1914). Thirty minor Upanishads. Robarts - University of Toronto. Madras : Printed by Annie Besant at the Vasanta Press. p. 124.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_நமோ_நாராயணாய&oldid=3799417" இலிருந்து மீள்விக்கப்பட்டது