பரப்பிரம்மன்

பரப்பிரம்மன் (Para Brahman) (சமசுகிருதம்:परब्रह्मन्) என்பதற்கு அனைத்து உயிர்களுக்கும், பிரபஞ்சங்களுக்கும் மேலான இறைவன் என்றும், அத்தகைய இறைவனின் குண நலன்களை வாயால் எடுத்துரைக்க இயலாததாகும் என்றும் இந்து சமயச் சாத்திரங்கள் கூறுகின்றன.

பரப்பிரம்மனே படைத்தல், காத்தல், மறைத்தல் எனும் முத்தொழில்களுக்கும் காரணமானவன் என்று போற்றப்படுகிறார். மேலும் பரப்பிரம்மன் சத் சித் ஆனந்த (முழு ஞான வடிவாக) இருப்பவர் என்றும் வர்ணிக்கப்படுகிறார். உபநிடதங்கள் நிர்குண பரப்பிரம்மதை ஞானத்தால் மட்டும் அறிவதன் மூலம் மனநிறைவு, ஜீவ முக்தி மற்றும் விதேக முக்தி கிட்டும் என முடிவாகக் கூறுகிறது சிலர் இதனை வேறு மாதிரியும் கூறுவர். அதாவது இந்த பிரபஞ்சம் தோன்றக் காரணமான செயல் நடத்தையைக் குறிக்கிறது. பர என்றால் ஆதி என்றும் அர்த்தம். ஆகவே பரப்பிரம்மன் என்பது இந்த பிரம்மம் தோன்ற காரணமாய் இருந்த காரணியைக் குறிக்கிறது.

பெயர்க் காரணம்

தொகு

பர எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு மேலானது அல்லது மேலானவர் என்று பொருள். பிரம்மன் எனும் சொல்லிற்கு அனைத்து அண்டங்களையும், அனைத்து உயிரினங்களையும் படைத்து, காத்து, பின்னர் தன்னில் மறைத்து கொள்ளும் இயல்பு கொண்ட அனைத்திற்கும் மேலான இறைவனை பரப்பிரம்மம் என்பர்.[1]

அத்வைத பரப்பிரம்மன்

தொகு

பரப்பிரம்மன் எனும் சொல் வழக்கம் துவக்க கால அத்வைத வேதாந்த சாத்திரங்களில் விளக்கப்பட்டுள்ளது.[2] அத்வைதம் கூறும் பரப்பிரம்மன், என்றும் மாறாதவன், பிறக்காதவன், வடிவமற்றவன், இரண்டற்றவன், அழிவற்றவன், எக்குணங்களும் அற்றவன் (நிர்குணமானவன்) அல்லது குணங்கள் அற்ற நிர்குண பிரம்மன் ஆவார். நிர்குண பிரம்மனை ஞான யோகத்தால் மட்டுமே அறிந்து அடைய இயலும். [3][4]

வைணவ சமயப் பரப்பிரம்மன்

தொகு

வைணவ சமயத்தினர் வடிவமும், குணங்களும் கொண்ட விஷ்ணு என்று அழைக்கப்படும் திருமால் அல்லது கிருஷ்ணரை பரப்பிரம்மனாக வழிபடுகின்றனர்.[5][note 1][6][note 2]

சைவ சமயப் பரப்பிரம்மன்

தொகு

சைவ சமயத்தில் மாயையுடன் கூடிய பிரம்மனை சிவபெருமான் என்று அழைப்பர். சைவ சமயப் பரப்பிரம்மன் சச்சிதானந்த (சத் சித் ஆனந்த) மயமானவன். சிவனும் சக்தியும் சமமானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்த, மாயையின் தன்மையான சக்திக்கு தனது உடலில் சரிபாதி இடம் அளித்தவர் சிவபெருமான்.

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. nityo nityanam chetanas chetananam eko bahunam yo vidadhati kaman
  2. ete camsa-kalah pumsah krishnas tu bhagavan svayam indras vyakulam lokam mrdayanti yuge yuge

மேற்கோள்கள்

தொகு
  1. Monier Monier-Williams, A Sanskrit-English Dictionary: Etymologically and Philologically Arranged with Special Reference to Cognate Indo-European languages, Oxford University Press, Article on Para
  2. Michael Comans (2002), The Method of Early Advaita Vedānta, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120817227, pages 129-130, 216-231
  3. Fisher 2012, ப. 116.
  4. Malkovsky 1997, ப. 541.
  5. Bhagavad-gītā as it is By A. C. Bhaktivedanta Swami Prabhupāda, pg. 334-335
  6. A.C. Bhaktivedanta Swami Prabhupāda. "Śrīmad Bhāgavatam 1.3.28".

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரப்பிரம்மன்&oldid=3913743" இலிருந்து மீள்விக்கப்பட்டது