ஓராங் ஊத்தான் தீவு
ஓராங் ஊத்தான் தீவு (ஆங்கிலம்: Orang Utan Island; மலாய்: Pulau Orang Utan;) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தின் புக்கிட் மேரா ஏரியில் அமைந்து உள்ள ஒரு சிறிய தீவாகும். மலாய் மொழியில் ஓராங் ஊத்தான் (Orang Utan) என்றால் மனிதக் குரங்கு என்று பொருள்.
புக்கிட் மேரா ஏரியில் ஓராங் ஊத்தான் தீவு | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | புக்கிட் மேரா (கிரியான்); பேராக் |
ஆள்கூறுகள் | 5°02′N 100°39′E / 5.033°N 100.650°E |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா |
நிர்வாகம் | |
1. மலேசிய அரசாங்கம் 2. புக்கிட் மேரா ஒராங் ஊத்தான் தீவு அறக்கட்டளை |
இந்தத் தீவில் புக்கிட் மேரா மனிதக் குரங்குகள் சரணாலயம் (Bukit Merah Orang Utan Rehabilitation Center) உள்ளது. போர்னியோ காடுகளில் தனித்து விடப்பட்ட மனிதக் குரங்குகள் இந்தத் தீவிற்குக் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன. 35 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் தீவு அமைந்து உள்ளது.[1]
வரலாறு
தொகு2000-ஆம் ஆண்டில் இந்த மனிதக் குரங்குகள் சரணாலயம் தொடங்கப்பட்டது. முதலில் மூன்று மனிதக் குரங்குகள் போர்னியோவில் இருந்து கொண்டு வரப்பட்டன. இப்போது 20 மனிதக் குரங்குகள் உள்ளன.[2]
மனிதக் குரங்குகள் பற்றிய விழிப்புணர்வு
தொகுபோர்னியோ காடுகளில் உள்ள மனிதக் குரங்குகள் அழிந்து போகும் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்தச் சரணாலயத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள், மனிதக் குரங்குகள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுகிறார்கள். சரவாக் மாநிலத்தில் மட்டும் அல்ல தீபகற்ப மலேசியாவிலும் ஒராங் ஊத்தான்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப் படுகின்றன.
தீபகற்ப மலேசியாவில் மீட்கப்படும் ஒராங் ஊத்தான்கள் அவற்றின் இயற்கை வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கு முன்னர் தற்காலிகமாகப் புகலிடம் வழங்கும் சரணாலயமாக ஒராங் ஊத்தான் தீவு விளங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Orang Utan Island is today a global eco-tourism destination. Since its inception in 2000, Orang Utan Island has progressed from being a sanctuary, where visitors experienced first-hand awareness and education on the orangutan". Archived from the original on 2020-02-19. பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.
- ↑ They have around 20 orangutans here, of different life stages. Bukit Merah Orang Utan Island runs a nursery and research center for orangutans. Besides the rehabilitation facility.