ஓரியல் கல்லூரி, ஆக்சுபோர்டு
ஓரியல் கல்லூரி (Oriel College)[2] இங்கிலாந்தின் ஆக்சுபோர்டு நகரின் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் அங்கமான கல்லூரி ஆகும். ஓரியல் சதுக்கத்தில் அமைந்துள்ள இக்கல்லூரிக்கு ஆக்சுபோர்டில் அரசரால் நிறுவப்பட்ட மிகத் தொன்மையான கல்லூரி என்ற பெருமை உண்டு; முன்பு இப்பெருமை பல்கலைக்கழக கல்லூரிக்கு உள்ளதாக கோரப்பட்டது. இந்த அரசத் தொடர்பால் இக்கல்லூரி அரசரின் கல்லூரி என்றும் அரசரின் கூடம் என்றும் அறியப்படுகின்றது.[3] ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியிலுள்ள அரசர் (1952 முதல், ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்) இதன் அலுவல்முறை வருநராக உள்ளார்.[4]
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளும் கூடங்களும் ஓரியல் கல்லூரி | |||||||||||
| |||||||||||
கல்லூரி பெயர் | ஆக்சுபோர்டில் புகழ்பெற்ற இரண்டாம் எட்வர்டு, சிலகாலம் இங்கிலாந்து அரசர், நிறுவிய அருளப்பட்ட கன்னி மேரிக்கூடத்தின் மேதகரும் அறிஞர்களும், பொதுவாக ஓரியல் கல்லூரி, | ||||||||||
இலத்தீனப் பெயர் | காலேஜியம் ஓரியலென்சு | ||||||||||
பெயரிடப்பட்டது | தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்) | ||||||||||
நிறுவப்பட்டது | 1324 | ||||||||||
சகோதரக் கல்லூரிகள் | கிளேர் கல்லூரி, கேம்பிரிட்சு இட்ரினிட்டி கல்லூரி, டப்ளின் | ||||||||||
மேதகர் | மொய்ரா வாலசு | ||||||||||
பட்டப்படிப்பு | 301[1] (2011/2012) | ||||||||||
பட்டமேற்படிப்பு | 158 | ||||||||||
மத்திய ஆக்சுபோர்டில் ஓரியல் கல்லூரி அமைந்துள்ளவிடம் | |||||||||||
வலைமனை | |||||||||||
படகு குழாம் | |||||||||||
பிளேசோன் | சிவப்புப் பின்னணி, தங்க வண்ணத்தில் மூன்று சிங்கங்கள் பொறிக்கப்பட்டது. |
நடுக்காலத்தில் இரண்டாம் எட்வர்டு அரசரின் ஆதரவில் ஆடம் டெ புரோமால் கட்டப்பட்ட துவக்க அடித்தளம் தூய மரியா கூடம் என அறியப்படுகின்றது.[5] முதல் வடிவமைப்பில் ஒரு மேதகரும் பத்து அறிஞர்களும் கொண்டதாக திட்டமிடப்பட்டது; 16ஆவது நூற்றாண்டு வரை சிறியளவில் பட்டமேற்படிப்பை மட்டும் வழங்கி வந்த கல்லூரி பின்னர் பட்டப்படிப்பையும் வழங்கத்தொடங்கியது.[6]இங்கிலாந்தின் உள்நாட்டுப் போரின்போது, அரசரின் ஆக்சுபோர்டு நாடாளுமன்றத்தின் மேதகு உறுப்பினர்களுக்கு ஓரியல் வசதிகளை வழங்கியது.[7]
கல்லூரியின் முதன்மை வளாகத்தில் நான்கு நடுக்கால கூடங்கள் உள்ளன: பெடெல் கூடம், புனித மேரி கூடம், புனித மார்டின் கூடம் மற்றும் டேக்லியின் தங்குமிடம். டேக்லியின் தங்குமிடம் கல்லூரி கையகப்படுத்திய மிகப் பழைய சொத்தாகும். ஆக்சுபோர்டிலுள்ள மிகப் பழைய கூடமும் இதுவே ஆகும்.[8] இக்கல்லூரியில் தற்போது 40 ஆய்வாளர்களும் (ஃபெல்லோ) 300 பட்டப்படிப்பு, 160 பட்ட மேற்படிப்பு மாணவர்களும் படிக்கின்றனர்; ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட சரிசமனாக உள்ளனர்.[6]
ஓரியலின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்களில் இருவர்நோபல் பரிசு பெற்றவர்கள்; குறிப்பிடத்தக்க ஆய்வாளர்கள் ஆக்சுபோர்டு இயக்கத்தை முன்னெடுத்தவர்கள்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Undergraduate numbers by college 2011-12". University of Oxford.
- ↑ Oxford University Calendar 2005–2006 (2005) p.323 has the corporate designation as "The Provost and Scholars of the House of the Blessed Mary the Virgin in Oxford, commonly called Oriel College, of the Foundation of Edward the Second of famous memory, sometime King of England", p324 has people — ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-928370-2.
- ↑ Watt, D. E. (editor), Oriel College, Oxford (Trinity term, 1953) — Oxford University Archaeological Society, uses material collected by C. R. Jones, R. J. Brenato, D. K. Garnier, W. J. Frampton and N. Covington, under advice from W. A. Pantin, particularly in respect of the architecture and treasures (manuscripts, printed books and silver plate) sections. 16 page publication, produced in association with the Ashmolean Museum as part of a college guide series.
- ↑ http://www.oxfordmail.co.uk/news/10322505.QUEEN_S_VISIT__Special_lunch_fit_for_a_Queen/
- ↑ Rannie, David, Oriel College (1900) — published by F. E. Robinson & Co. London (Part of the University of Oxford College Histories series) pp.1, 5–10, 102, 105, 108–110, 241 and 235.
- ↑ 6.0 6.1 Oriel College Oxford, A short guide — published by Oriel College Development Trust on behalf of Oriel College, Oxford.
- ↑ "The Oxford Parliament". British Civil Wars, Commonwealth and Protectorate 1638–60. Archived from the original on 2 அக்டோபர் 2008. பார்க்கப்பட்ட நாள் 3 September 2006.
- ↑ Oriel College Memorandum 2003–4.
வெளி இணைப்புகள்
தொகு- Official website
- Oriel JCR — the undergraduate body of the college
- Oriel MCR — the graduate body of the college
- Virtual Tour பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம்
- Oriel College Boat Club
- The Oriel Lions — Oriel College Drama Society பரணிடப்பட்டது 2011-02-04 at the வந்தவழி இயந்திரம்