ஓல்கா பெரோவ்ஸ்காயா

ஓல்கா வசிலீவ்னா பெரோவ்ஸ்காயா (Olga Vasilievna Perovskaya, О́льга Васи́льевна Перо́вская, ஏப்ரல் 9, 19021961) ஒரு சோவியத் குழந்தைகள் எழுத்தாளர். கசாக்ஸ்தானில் பிறந்த இவரது குறிப்பிடத்தக்க படைப்பு ரெப்யாட்டா இ ஸ்வெரியாட்டா (Rebyata i Zveryata) என்பதாகும். ஓல்கா தன் குழந்தைப் பருவத்தில் தனது சகோதரிகள் சோன்யா, யூலியா மற்றும் நடாஷா ஆகியோருடன் வீட்டில் வளர்த்த காட்டு விலங்குகள் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு இப்புத்தகம். 1925 இல் முதலில் வெளியானது. ஸ்டாலினின் பெரும் தூய்மைப்படுத்தல் காலகட்டத்தில் ஓல்கா பத்து ஆண்டுகள் வேலை முகாம்களில் கழிக்க தண்டனை விதிக்கப்பட்டார். பின்பு இத்தண்டனை நாடு கடத்தலாக மாற்றப்பட்டது. 1940-50 காலகட்டத்தில் அவரது புத்தகங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் 50களின் இறுதியில் சோவியத் அதிகாரக் கட்டமைப்பால் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இவரது ரெப்யாட்டா இ ஸ்வெரியாட்டா ஆங்கிலம், தமிழ், மலையாளம் உட்பட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் “குழந்தைகளும் குட்டிகளும்” என்ற பெயரில் வெளியானது.

மேற்கோள்கள்

தொகு
  • "Olga Vasilievna Perovskaya". FindaGrave.com. பார்க்கப்பட்ட நாள் 9 September 2011.
  • "The Wolf in Olga's Kitchen". Archived from the original on 2 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்கா_பெரோவ்ஸ்காயா&oldid=3547202" இலிருந்து மீள்விக்கப்பட்டது