ஓல்மியம் மோனோசல்பைடு
ஓல்மியம் மோனோசல்பைடு (Holmium monosulfide) என்பது HoS என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஓல்மியம்(II) சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
HoS | |
வாய்ப்பாட்டு எடை | 196.99 g·mol−1 |
தோற்றம் | Crystals |
அடர்த்தி | 8.0 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவிகிதவியல் அளவில் தூய ஓல்மியம் தனிமத்தையும் கந்தகத்தையும் சேர்த்து மந்தவாயுச் சூழலில் சூடுபடுத்தி வினைபுரியச் செய்து ஓல்மியம் மோனோசல்பைடு தயாரிக்கப்படுகிறது.
- Ho + S → HoS
இயற்பியல் பண்புகள்
தொகுஓல்மியம் மோனோசல்பைடு கனசதுர அமைப்பில் Fm3m என்ற இடக்குழுவுடன் a = 0.5465 நானோமீட்டர், Z = 4 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் படிகங்களாக உருவாகிறது. சோடியம் குளோரைடு ஒத்த படிக அமைப்பை கொண்டுள்ளது.[3]
பயன்
தொகுமின்சார மற்றும் காந்த பதிவு சாதனங்களில் சாத்தியமான பயன்பாடுகளுக்காக ஓல்மியம் மோனோசல்பைடு கவனத்தை ஈர்க்கிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Fizika tverdogo tela (in ஆங்கிலம்). American Institute of Physics. 1982. p. 1268. பார்க்கப்பட்ட நாள் 28 July 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3481. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 28 July 2024.
- ↑ Predel, B. (1997). "Ho-S (Holmium-Sulfur)" (in en). Hg-Ho – La-Zr. Landolt-Börnstein - Group IV Physical Chemistry G: 1. doi:10.1007/10506626_1692. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-60342-5. https://materials.springer.com/lb/docs/sm_lbs_978-3-540-44940-9_1692. பார்த்த நாள்: 28 July 2024.
- ↑ Bien, Tran Nhu; Hirai, Shinji; Vasilyeva, Inga G.; Nikolaev, Ruslan; Sekine, Chihiro; Kamegawa, Atsunori; Wakiya, Kazuhei; Kawamura, Yukihiro (April 2021). "Composition and microstructure of holmium monosulfide compacts processed by reaction sintering". Journal of Alloys and Compounds 859: 157872. doi:10.1016/j.jallcom.2020.157872. https://consensus.app/papers/composition-microstructure-holmium-monosulfide-bien/31375e29c4355f62b3c6246e1901e281/.