ஓவியத்தின் மூலக்கூறுகள்

கோடு, முப்பரிமாணத் தோற்றம், வெளி, படிக அமைப்பு, வடிவம், வண்ணம், மதிப்பு ஆகியவை ஓவியத்தின் மூலக்கூறுகள் (Elements of art) ஆகும்.

கோடு

தொகு

வரைதிரையில் இரு புள்ளிகளை இணைக்கும் கீறல் கோடு எனப்படும். கோடுகள், செங்குத்துக் கோடுகள், படுக்கைக் கோடுகள், சாய்வுக் கோடுகள், வளைவுக்கோடுகள், என பல வகைப்படும். கோடானது நீளம், அகலம், திசை ஆகிய மூன்றும் கொண்டதாகும்.[1]

கன பரிமாணத் தோற்றம்

தொகு

ஒரு பொருள் வரைதிரையில் கன அளவுடன் எடுத்துக்கொள்ளும் இடம் அல்லது எடுத்துக்கொள்வதுபோலத் தோன்றும் இடம் கன பரிமாணத்தோற்றம் எனப்படும். பொதுவாக முப்பரிமாண பொருட்களை விவரிக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. முப்பரிமாணப் ஓவியப் படைப்புகள் நீள, அகலத்துடன் ஆழமும் கொண்டிருக்கும்.[1] இருபரிமாண ஓவியங்களிலும் தோற்றம் மற்றும் நிழலிடல் உத்திகள் மூலம் கனபரிமாணத் தோற்றத்தைக் கொணர முடியும்.[2]

வெளி

தொகு

வரைஞரால் குறிப்பிட்ட காரணத்திற்காக வரைதிரையில் அளிக்கப்படும் இடங்கள் வெளி எனப்படும் (Space).[1] வெளி என்பது முன்னமைவு, நடு அமைவு, பின்அமைவுப் பகுதிகளைக் கொண்டது. நேர் வெளி, எதிர் வெளி என இருவகையாக அமையும்[3] . வரையப்பட்ட பொருள் அமையும் இடம் நேர்வெளி; மீதமிருக்கும் இடம் எதிர் வெளி ஆகும்.

படிக அமைப்பு

தொகு

வரை தளத்தின் அல்லது வரை பொருளின் தொட்டு உணரக்கூடிய வழவழப்பான அல்லது சொரசொரப்பான தன்மையை படிக அமைப்பு (Texture) எனலாம்.

வடிவம்

தொகு

வரைதிரையில் கோடுகளுக்குள் அடைக்கப்பட்ட உருவத்தை வடிவம் எனலாம். வடிவங்கள் செயற்கை சார்ந்த வடிவங்களாகவோ (Geometric) இயற்கை சார்ந்த (Organic) வடிவங்களாகவோ இருக்கலாம்.

வண்ணம்

தொகு

வண்ணங்கள் பலவகைப்படும். முதன்மை வண்ணங்கள் (Primary Colors) இரண்டாம்தர வண்ணங்கள் (Secondary Colors ) மூன்றாம்தர வண்ணங்கள் (Tertiary Colors ) மற்றும் பல[4].

மதிப்பு

தொகு

வரைதிரையில் வரையப்படும் பொருளில் ஒளி மற்றும் இருளின் (Light & Shade) அளவு அல்லது வண்ணங்களின் ஒளிர்மை, இருண்மை தன்மையின் அளவு மதிப்பு (Value) ஆகும்[5] .

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Understanding Formal Analysis". Getty. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  2. "What Are the Elements of Art?". About.com. Archived from the original on 10 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Vocabulary: Elements of Art, Principles of Art" (PDF). Oberlin. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  4. "What is the Definition of Color in Art?". About.com. Archived from the original on 13 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  5. "What is Value in Art?". Archived from the original on 2014-04-12. பார்க்கப்பட்ட நாள் 2015-04-01.