ககவுசு மொழி

ககவுசு மொழி (Gagauz dili, Gagauzca) துருக்கிய மொழிகளில் ஒன்று. மல்டோவாவின் தெற்கு பகுதியில் ககவுசு தன்னாட்சி மண்டலத்தில் ஆட்சி மொழியாகும். இப்பகுதியை தவிர, உக்ரைன், துருக்கி, ரசியா ஆகிய நாடுகளில் ககவுசு மக்கள் வசிக்கும் இடங்களிலும் பேசப்படுகிறது. துருக்கி மொழிக் குடும்பத்தின் ஒகுஸ் பிரிவில் சேர்ந்த மொழிகளில் ககவுசு ஒன்று. துருக்கிய மொழி, அசர்பைஜான் மொழி, கிரிமிய தத்தார் மொழி, துருக்குமேனிய மொழி ஆகிய மொழிகளுக்கும் ககவுசு மொழிக்கும் ஒற்றுமை உள்ளது.

ககவுசு
Gagauz
Gagauz dili, Gagauzca
நாடு(கள்)மல்டோவா, உக்ரைன், உருசியா, துருக்கி
பிராந்தியம்ககவுசியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
174,000  (2000–2007)e17
துருக்கியம்
இலத்தீன் (ககவுசு அரிச்சுவடி)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3gag
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியின் பொழுது சிரிலிக் எழுத்துமுறையால் எழுதப்பட்டது, ஆனால் தற்போது இலத்தீன் எழுத்துமுறையின் ஒரு வகையுடன் எழுதப்படுகிறது.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ககவுசு_மொழி&oldid=1633807" இலிருந்து மீள்விக்கப்பட்டது