கங்கா தேவி (ஓவியர்)
கங்கா தேவி (1928-1991) ஒரு இந்திய ஓவியர், [1] மதுபானி ஓவிய பாரம்பரியத்தின் முன்னணி நிபுணர்களில் ஒருவராக பலரால் கருதப்படுகிறார். [2] மதுபானி ஓவியத்தை இந்தியாவுக்கு வெளியே பிரபலப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. [3] கயஸ்தா பிராமணக் குடும்பத்தில் 1928 ஆம் ஆண்டில் இந்திய மாநிலமான பீகாரில் உள்ள மிதிலையில்]] பிறந்தார். கச்னி (வரி வரைதல்) பாணியில் நிபுணத்துவம் பெற்ற பாரம்பரிய ஓவியத்தில் பயிற்சி பெற்றார். [4] இவர் தனது கலையுடன் அமெரிக்காவில் நடந்த இந்திய விழா உட்பட பல வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். பகுதியாக இருந்தார். இந்திய இந்திய அரசு இவருக்கு "மிகச்சிறந்த தேசியக் கைவினைஞர்" விருதை வழங்கியது. அதைத் தொடர்ந்து 1984ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [5]
1980 களில், கங்கா தேவி தில்லியில் உள்ள கைவினை அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற சுவரோவியமான கோபர் கர் அல்லது திருமண அறைக்கு வண்ணம் தீட்டினார். கங்கா தேவி தில்லி மருத்துவமனையில் தனது புற்றுநோய்க்குச் வேதிச்சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது மூன்று முதல் நான்கு மாத காலப்பகுதியில் சுவரோவியம் வரையப்பட்டது. [6] துரதிருஷ்டவசமாக, இது 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அருங்காட்சியகத்தின் புதுப்பிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இடிக்கப்பட்டது. [7]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகங்கா தேவி "அமெரிக்காவில் இந்திய விழா" விற்குத் தேர்வு செய்யப்பட்டார். [8] இவர் உருசியா, சப்பான் ஆகிய நாடுகளிலும் இந்தியக் கலையை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் தனது அனுபவங்கள் அனைத்தையும் ஓவியங்கள் மூலம் விவரித்தார். [9]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Jyotindra Jain (1989). "Ganga Devi: Tradition and expression in Madhubani painting". Third Text 3 (6): 43–50. doi:10.1080/09528828908576213.
- ↑ "Riding the Rollercoaster with Ganga Devi". 50 Watts. 2015. பார்க்கப்பட்ட நாள் 9 September 2015.
- ↑ "Madhubani Magic of Gangadevi". Pitara. 2015. பார்க்கப்பட்ட நாள் 9 September 2015.
- ↑ "Ganga Devi - Artist Profile". Mithila Paintings. 2015. பார்க்கப்பட்ட நாள் 9 September 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Museum art erased". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
- ↑ "Crafts museum 'renovation' wipes out famed Madhubani murals - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
- ↑ shampasaid. "Contribution of Ganga Devi– Synonym of Madhubani Art to Culture of India". Realbharat (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
- ↑ De, Aditi. "Madhubani Magic of Gangadevi | Pitara Kids Network" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
மேலும் படிக்க
தொகு- Jyotindra Jain (1989). "Ganga Devi: Tradition and expression in Madhubani painting". Third Text 3 (6): 43–50. doi:10.1080/09528828908576213.