கங்கை காவிரி இணைப்பு

கங்கையையும் காவேரியையும் இணைக்கும் கார்லண்ட் கால்வாய் திட்டம் 1972இல் முன்வைக்கப்பட்டது. தின்சா தஸ்தூர் என்கிற பொறியாளரால் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு அப்போது கோரப்பட்ட நிதி ரூ.15,000 கோடி.இமாலய நதிநீர் கால்வாய், தக்காண பீடபூமிக் கால்வாய் என்ற இரண்டு ராட்சதக் கால்வாய்கள் இந்தத் திட்டத்தின் அடிப்படை.[1]

வரலாறு

தொகு

1972இல் முன்வைக்கப்பட்ட கார்லண்ட் கால்வாய் திட்டத்தின் தொடர்ச்சியாக 1982இல் தேசிய நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் ஆய்வுப்படி 14 இமயமலை சார்ந்த நதிகளையும், 16 தக்காண பீடபூமி நதிகளையும் முதற்கட்டமாக இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவது என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.[1]

இமாலய நதிநீர் கால்வாய்

தொகு

இமயமலையின் அடிவாரத்தில் ராவி நதிக் கரையிலிருந்து சிட்டகாங் வரையில் 300 மீட்டர் அகலமுள்ள ராட்சதக் கால்வாய் சுமார் 3,800 கி.மீ தூரத்துக்கு வெட்டுவது என்பது கார்லண்ட் கால்வாய் திட்டத்தின் முதல் பகுதி. இதன் மூலம் இமாலய நதிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச் சேதத்தை எதிர்கொள்வது குறிக்கோள்.[1]

தக்காண பீடபூமிக் கால்வாய்

தொகு

தக்காண பீடபூமிக் கால்வாய் சம்பல் நதியில் தொடங்கி கன்னியாகுமரியில் முடிவடையும். ஒரு பெரிய மாலைபோல அமையும் இந்தக் கால்வாய் விந்திய மலைக்குக் கீழேயுள்ள மழை நீரை எதிர்நோக்கும் தென்னிந்திய நதிகள் அனைத்தையும் இணைப்பதாக அமையும். இமாலய நதிநீர் கால்வாய் இரண்டு இடங்களில் பெரிய குழாய்கள் மூலம் தக்காணப் பீடபூமிக் கால்வாயுடன் இணைக்கப்படும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "இணைத்(ந்)தாக வேண்டும்!". தினமணி. 14 பெப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கை_காவிரி_இணைப்பு&oldid=3928442" இலிருந்து மீள்விக்கப்பட்டது