கங்ரா ஓவியப் பாணி

கங்ரா ஓவியப் பாணி (Kangra painting), 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்திய மலைப்பகுதியான கங்ராவில் வழங்கி வந்தது. இது பஹாரி ஓவியப் பாணியின் ஒரு பிரிவாகும். இப்பகுதியை ஆண்ட மகாராஜா சன்சார் சந்த் என்பவரின் காலத்தில் கங்ரா, பஹாரி ஓவியப் பாணியின் செல்வாக்கு மையமாகத் திகழ்ந்தது. இவர் காலத்திலேயே இப் பாணியிலான சிறந்த ஓவியங்கள் வரையப்பட்டன. பாகவத புராணம், கீத கோவிந்தம், நள தமயந்தி, சத்சாய் போன்ற அக்கால இலக்கியக் கருப்பொருள்களை மையமாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் குறிப்பிடத் தக்கவை. மகாராஜாவும், மற்றவர்களும் தொடர்புபட்ட அரசவைக் காட்சிகளும் வரையப்பட்டன.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bradnock, Robert W.; Bradnock, Roma (2004). Footprint India. Footprint Travel Guides. p. 512. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-904777-00-7.
  2. Kangra painting Britannica.com.
  3. Pahari centres Arts of India: Architecture, Sculpture, Painting, Music, Dance and Handicraft, by Krishna Chaitanya. Published by Abhinav Publications, 1987. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-209-8. Page 62.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்ரா_ஓவியப்_பாணி&oldid=3889719" இலிருந்து மீள்விக்கப்பட்டது