கங் மின் கியுக்
கங் மின் கியுக் (ஆங்கில மொழி: Kang Min Hyuk, 강민혁) (பிறப்பு: ஜூன் 28, 1991)[1][2][3] என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர்-பாடலாசிரியர் ஆவார். இவர் தென் கொரிய சிஎன்புளு என்ற ராக் இசைக்குழு இன் டிரம்மர் ஆவார்.
கங் மின் கியுக் | |
---|---|
கங் மின்-ஹ்யுக் | |
பிறப்பு | கங் மின் கியுக் சூன் 28, 1991 கோயங் தென் கொரியா |
பணி | பாடகர்-பாடலாசிரியர் டிரம்மர் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2009–இன்று வரை |
இசை குழுவில்
தொகுஇவர் 2009 இல் 'சிஎன்புளு' என்ற இசை குழுவில் உறுப்பினரானார். அதை தொடர்ந்து ஆகத்து 19, 2009 இல் ஏஐ என்டர்டெயின்மென்ட்டு என்ற இண்டி லேபிளுடன் "நவ் ஆர் நெவர்" என்ற ஆல்பத்துடன் இந்த குழு ஜப்பானில் அறிமுகமானது.[4][5] அவர்கள் அதிகாரப்பூர்வமாக 2010 இல் கொரியாவில் புளூடோரி என்ற ஆல்பத்துடன் அறிமுகமானார்கள், மேலும் "ஐ அம் எ லோனர்" என்ற தலைப்புப் பாடல் கொரியாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.[6]
தொழில்
தொகுஇவர் 2010 ஆம் ஆண்டில், தனது சக 'சிஎன்புளு' உறுப்பினரான லீ ஜாங் கியூனுடன் இணைந்து ஒரு திரைப்படமான அக்யூஸ்டி என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.[7][8] பின்னர் அதே ஆண்டில் எஸ்.பி.எஸ் தொலைக்காட்சி நாடகமான 'இட்ஸ் ஓகே, டாடிஸ் கேர்ள்' என்ற தொடரின் மூலம் சின்னத்திரையிலும் அறிமுகமானார்.[9]
2011 இல், இவர் எம்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹார்ட்ஸ்ட்ரிங்ஸ் என்ற தொடரில் நடித்தார், இதில் சக 'சிஎன்புளு' உறுப்பினர் யுங் யாங்கவா என்பவரும் நடித்தார்.[10][11] மேலும் இவர் இந்த தொடருக்காக "ஸ்டார்" என்ற தலைப்பில் நாடகத்திற்கான பாடலைப் பாடியுள்ளார்.[12] பின்னர் இவர் 2012 ஆம் ஆண்டில், கேபிஎஸ் தொலைக்காட்சியின் வார இறுதி குடும்ப நாடகமான 'மை கஸ்பண்ட் காட் எ பேமிலி' என்ற தொடரில் நடித்தார்,[13] இந்த தொடரில் இவர் ஒரு பிளேபாய் பாத்திரத்திற்காக அங்கீகாரம் பெற்றார்.[14] அத்துடன் இந்தத் தொடர் வாராந்திர மதிப்பீடுகள் பட்டியலில் தொடர்ந்து 25 வாரங்களுக்கு முதலிடத்தைப் பிடித்தது.
2013 ஆம் ஆண்டில், எழுத்தாளர் கிம் யூன் சூக் எழுதிய இளம்வயது நாடகமான தி ஹெர்ஸ் என்ற தொடரில் நடித்த பிறகு இவர் தொடர்ந்து பிரபலமடைந்தார்.[15][16] அத்துடன் 2013 ஆம் ஆண்டு டிராமா பீவர் விருதுகளில் இவரது இணை நடிகரான கிறிஸ்டல் உடன் இணைந்து சிறந்த திரை ஜோடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதை தொடர்ந்து பிரேவ் பேமிலி[17] (2015), என்டர்டெய்னர்[18] (2016) போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
இவர் 2017 ஆம் ஆண்டில், எம்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மருத்துவ நாடகமான 'ஹாஸ்பிடல் ஷிப்' என்ற தொடரில் கதாநாயகனான நடித்தார்.[19][20] இதுவே இவரின் முதல் கதாநாயகனாக நடித்த தொடர் ஆகும். அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு 'ஓ மை லேடிலார்ட்என்ற தொடரிலும் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mark Russell (April 29, 2014). K-Pop Now!: The Korean Music Revolution. Tuttle Publishing. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4629-1411-1.
- ↑ "Kang Min-hyuk (강민혁, Korean actor, drummer, singer, tv personality)". HanCinema (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-23.
- ↑ "cnblue강민혁 :: 네이버 인물검색". Naver (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-23.
- ↑ "'정용화 밴드' 씨엔블루 데뷔곡 '외톨이야' 세련미+중독성 '대박예감'" (in ko). 14 January 2018. http://www.newsen.com/news_view.php?uid=201001141611341002.
- ↑ "[캐리커처로 보는 이슈피플] 데뷔 5주년 씨엔블루, 대표 한류스타 '우뚝'". News2day (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-23.
- ↑ "CNBLUE tops TV music charts". 10Asia. 1 February 2010.
- ↑ "Acoustic (12)". Korea JoongAng Daily. October 28, 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-08-06.
- ↑ "Pop idols not enough for 'Acoustic'". Hancinema. The Korea Times. 28 October 2010.
- ↑ "CNBLUE member Kang Min-hyuk to make small screen debut". Hancinema (10Asia). 19 October 2010. https://www.hancinema.net/cnblue-member-kang-min-hyuk-to-make-small-screen-debut-25539.html.
- ↑ "CNBLUE member Min-hyuk cast in Jung Yong-hwa drama". 10Asia. 21 March 2011.
- ↑ "Campus romance to pull at Heartstrings". The Korea Times. 28 June 2011.
- ↑ Kim, Myeong-hyeon (2011-07-05). "씨엔블루 강민혁, 첫 솔로곡 '별'로 OST 참여". hankyung.com (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
- ↑ "CNBLUE Kang Min-hyuk to play womanizer in new KBS weekend series". 10Asia. 6 February 2012. Archived from the original on 6 August 2017.
- ↑ "CN Blue's Kang Min Hyuk Charms as a Player on 'Unexpected You'". enewsWorld. 29 April 2012.
- ↑ "CN Blue's Kang Min Hyuk Hops on 'The Heirs' Wagon". enewsWorld. 17 July 2013. Archived from the original on August 6, 2017. பார்க்கப்பட்ட நாள் August 6, 2017.
- ↑ "CNBLUE Kang Min-hyuk, ZE:A Hyungsik Join Lee Min-ho Drama". 10Asia. 17 July 2013. Archived from the original on April 26, 2019. பார்க்கப்பட்ட நாள் February 1, 2018.
- ↑ "CN Blue's Kang Min Hyuk is Happy to Have AOA's Seolhyun as His Younger Sister in 'Brave Family'". enewsWorld. 20 January 2015.
- ↑ "CNBLUE's Kang Min-hyuk 'honored' to act with Hyeri, Ji Sung". Kpop Herald. 7 April 2016.
- ↑ "CNBLUE's Kang Min-hyuk to star in upcoming medical drama". Kpop Herald. 15 June 2017.
- ↑ "Kang Min-hyuk, Lee Seo-won to team up with Ha Ji-won to play doctor roles". Kpop Herald. 4 July 2017.
வெளி இணைப்புகள்
தொகு- டுவிட்டரில் கங் மின் கியுக்
- CN Blue official website (கொரிய மொழி)
- CN Blue official Japanese website (சப்பானிய மொழி)]