கசானி ஞானேசுவர் முதிராஜ்

இந்திய அரசியல்வாதி

கசானி ஞானேசுவர் முதிராஜ் (Kasani Gnaneshwar Mudiraj) (பிறப்பு: ஆகஸ்ட் 19, 1954) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2007 முதல் 2011 வரை இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றினார். இவர் நவம்பர் 2022 இல் முன்னாள் முதல்வர் நா. சந்திரபாபு நாயுடு அவர்களால் தெலங்காணா பிரிவுக்கான தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்

கசானி ஞானேசுவர் முதிராஜ்
பதவியேற்பு விழாவில் கசானி ஞானேசுவர் முதிராஜ்
தெலுங்கு தேசம் கட்சியின் தெலங்காணாப் பிரிவின் மூன்றாவது தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 நவம்பர் 2022
தேசியத் தலைவர்நா. சந்திரபாபு நாயுடு
முன்னையவர்பக்கனி நரசிம்முலு
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2007–2011
மன கட்சி
பதவியில்
ஆகஸ்ட் 2007 – 2022
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்கலிக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 ஆகத்து 1954 (1954-08-19) (அகவை 69)
பச்சுபள்ளி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிBRS
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
(2022 வரை)
மன கட்சி
(2007)
தெலுங்கு தேசம் கட்சி
(2023 வரை)
துணைவர்கசானி சந்திரகலா

கசானி ஞானேசுவர் முதிராஜு சமூகத்தின் தேசியத் தலைவராகவும் பணியாற்றுகிறார். மேலும் இவர் பெரும்பாலும் இதர பிற்படுத்தப்பட்ட சமூதத்தினரின் வலுவான தலைவராகக் கருதப்படுகிறார். [1] [2] 2007 இல் மன கட்சி என்ற கட்சியை நிறுவினார். [3] [4]

தொழில் தொகு

இவர் 2001 முதல் 2006 வரை தெலுங்கு தேசம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ரங்காரெட்டி மாவட்டத்தின் [5] மாவட்ட ஊராட்சித் தலைவராக பணியாற்றினார்.

2007 ஆம் ஆண்டில், பாரத் இராட்டிர சமிதி கிளர்ச்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆதரவுடன் சுயேச்சையாக சட்டமன்ற ஒதுக்கீட்டில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்ட சபைக்கு ஞானேசுவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6]

மற்றொரு கட்சியின் தலைவரான துல்லா தேவேந்திர கௌடுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து வெளியேறினார். ஆகஸ்ட் 2007 இல், 'மன கட்சி' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இது தங்களை ஆந்திரப் பிரதேசத்திலுள்ள இதர பிற்படுத்தப்ப்ட்ட சமூகத்தின் பிரதிநிதி என்று கூறுகிறது.

2009 இல், இவர் குத்புல்லாபூர் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். தனது மன கட்சிக்காக 23430 வாக்குகளைப் பெற்றார். [7] பின்னர், சிரஞ்சீவியின் பிரசா ராச்யம் கட்சியுடன் [8] கூட்டணியில் நுழைந்து 2009 பொதுத் தேர்தலில் செவெள்ள மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, [9] 19996 வாக்குகள் பெற்றார். [10] 19996 வாக்குகள் பெற்றார். 2018 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் சிக்கந்திராபாத் சட்டமன்றத் தொகுதியில் பிரஜாகுடாமியை எதிர்த்து[11] [12] போட்டியிட்டு தோல்வியடைந்தார். [13]

2022 இல், இவர் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சியில் கட்சித் தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான நா. சந்திரபாபு நாயுடு முன்னிலையில் மீண்டும் இணைந்தார். [1] நவம்பர் 4, 2022 அன்று, தெலங்காணாப் பிரிவின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக கசானி நியமிக்கப்பட்டார். [14] [15]

இருப்பினும் மீண்டும் 30 அக்டோபர் 2023 அன்று, 2023 தெலங்காணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சற்று முன்பு, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் நா. சந்திரபாபு நாயுடுவின் முடிவை விமர்சித்து, தலைவர் பதவியிலிருந்தும், கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் இவர் ராஜினாமா செய்தார்.

பிற பணிகள் தொகு

ஐதராபாத்து துடுப்பாட்டச் சங்கம் [16] மற்றும் தெலங்காணா கபடி சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். [17] ஏப்ரல் 2017 இல், இவர் அனைத்து இந்திய கபடி கூட்டமைப்பின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [18] 2015 முதல் சர்வதேச கபடி கூட்டமைப்பின் இயக்குநராக பணியாற்றி வருகிறார் [19]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Telangana TDP Springs A Big Surprise". Mirchi9.com. 2022-10-14.
  2. "Kasani Gnaneshwar banking on BC base". December 1, 2018. https://www.thehansindia.com/posts/index/Telangana/2018-12-01/Kasani-Gnaneshwar-banking-on-BC-base/450627. 
  3. "Mana Party launched". தி இந்து. 21 August 2007. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Mana-Party-launched/article14819833.ece. 
  4. . 
  5. "Wine them, dine them & dump them as illiterates". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 May 2010. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/Wine-them-dine-them-dump-them-as-illiterates/articleshow/5891266.cms. 
  6. "AICC clears names of Kasani, Prabhakar for polls". The Siasat Daily. 18 April 2010. https://archive.siasat.com/news/aicc-clears-names-kasani-prabhakar-polls-98991/. 
  7. Statistical Report on General Election, 2009 to the Legislative Assembly Of Andhra Pradesh
  8. . 
  9. "Praja Rajyam releases fourth list". 31 March 2009. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Praja-Rajyam-releases-fourth-list/article16652045.ece. 
  10. "Election Results Details of Chevella". 25 November 2014.
  11. "Telangana elections: Backward classes get lion's share in Congress' final list". 19 November 2019. https://www.newindianexpress.com/elections/telangana-elections/2018/nov/19/telangana-elections-backward-classes-get-lions-share-in-congress-final-list-1900116.html. 
  12. "Congress names 6 candidates in final list". 19 November 2018. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/congress-names-6-candidates-in-final-list/articleshow/66686848.cms. 
  13. "Kasani Gnaneshwar Mudiraj". https://www.electwise.in/politician/kasani-gnaneshwar-mudiraj/. 
  14. "Kasani Gnaneshwar appointed Telangana TDP President". பார்க்கப்பட்ட நாள் 2022-11-05.
  15. "Kasani Gnaneshwar: తెదేపా తెలంగాణ అధ్యక్షుడిగా కాసాని జ్ఞానేశ్వర్‌". https://www.eenadu.net/telugu-news/politics/kasani-gnaneshwar-as-appointed-tdp-telangana-president/0500/122208557. 
  16. "Kasani to contest HCA polls". 16 June 2010. https://www.thehindu.com/news/cities/Hyderabad/Kasani-to-contest-HCA-polls/article16246689.ece. 
  17. "Telangana State kabaddi from Thursday". The Hans India. 5 December 2017. https://www.thehansindia.com/posts/index/Sports/2017-12-05/Telangana-State-kabaddi-from-Thursday/343084. 
  18. "భారత కబడ్డీ సమాఖ్య కోశాధికారిగా కాసాని". Northern Territory News. 25 April 2017. https://www.ntnews.com/Sports/indian-kabaddi-federation-treasurer-kasani-gnaneshwar-mudiraj-3-1-482742.aspx. 
  19. "International Kabaddi Federation". 18 September 2018.