பச்சுபள்ளி

பச்சுபள்ளி (Bachupally) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது மல்கஜ்கிரி வருவாய் பிரிவில் உள்ள பச்சுப்பள்ளி மண்டலத்தின் மண்டல தலைமையகம் ஆகும்.[1] இது மாநிலத்தில் மாவட்டங்களை மறுசீரமைப்பதற்கு முன்பு ரங்காரெட்டி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. [2]

பச்சுபள்ளி
அண்மைப்பகுதி & வட்டம்
பச்சுபள்ளியில் குளக்கரையின் காலை நேரக் காட்சி
பச்சுபள்ளி is located in தெலங்காணா
பச்சுபள்ளி
பச்சுபள்ளி
தெலங்காணாவில் பச்சுபள்ளியின் அமைவிடம்
பச்சுபள்ளி is located in இந்தியா
பச்சுபள்ளி
பச்சுபள்ளி
பச்சுபள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°32′49″N 78°21′54″E / 17.54685°N 78.365023°E / 17.54685; 78.365023
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்மெட்சல்-மல்காஜ்கிரி
அரசு
 • வகைபெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி, ஐதராபாத்து பெருநகர மேம்பாட்டு ஆணையம்
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்500 090
வாகனப் பதிவுடிஎஸ்-08
மக்களவை தொகுதிமல்காஜ்கிரி
சட்டப்பேரவை தொகுதிகுவாத்புல்லாபூர்
திட்டமிடல் நிறுவனம்ஐதராபாத்து பெருநகர மேம்பாட்டு ஆணையம்

பொருளாதாரம் தொகு

பச்சுபள்ளியில் மனை வர்த்தகம் என்பது பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஒரு முக்கிய துறையாக இருக்கிறது.[3] இது ஐதராபாத்தின் 'மருந்து மையம்' என்றும் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது டாக்டர் ரெட்டியின் ஆய்வகம், அரவிந்தோ பார்மா மற்றும் எஸ்எம்எஸ் பார்மா உள்ளிட்ட சிறந்த உலகளாவிய மருந்து உற்பத்தியாளர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திராவின் உலகின் மிகப்பெரிய பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையமாகவும் இந்த இடம் உள்ளது. இந்த வசதியில் 10,000 தொழில்நுட்ப கூட்டாளிகள் உள்ளனர். கூடுதலாக, இந்தியாவின் உயர்மட்ட தனியார் பொறியியல் கல்லூரியான மஹிந்திரா ஈகோல் சென்ட்ரலின் இருப்பிடமாக இந்தப் பகுதி உள்ளது. டெக் மஹிந்திரா, ஈகோல் சென்ட்ரல் பாரிஸ் (இப்போது சென்ட்ரல் சூபெலெக்) மற்றும் ஐதராபாத்தின் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த கல்லூரி 2014 இல் நிறுவப்பட்டது.[4]

மனை வர்த்தகம் தொகு

 
எஸ்.ஆர்.ஆர் வீடுகள்
 
எஸ்.ஆர்.ஆர் அடுக்ககங்களில் அமைந்துள்ள ஒரு நீச்சல் குளம்
 
சமுதாயக் கூடம்

மனை வர்த்தகம் என்பது இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டுள்ளது. எஸ்.ஆர்.ஆர் நிறுவனமும், பிரணீத் ஆகியவை சில பெரிய முயற்சிகளாகும். சுக்ருதி இல்லங்களும் (ஸ்ரீ அவானி) பச்சுப்பள்ளிக்கு மிக அருகில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Medchal-Malkajgiri district" (PDF). Official website of Medchal district. Archived from the original (PDF) on 22 March 2017. பார்க்கப்பட்ட நாள் 20 March 2017.
  2. "Medchal−Malkajgiri district" (PDF). New Districts Formation Portal. Government of Telangana. Archived from the original (PDF) on 30 November 2016. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
  3. "Hyderabad emerges as one of the most promising real estate markets in 2015 | The Siasat Daily". www.siasat.com. http://www.siasat.com/news/hyderabad-emerges-one-promising-real-estate-markets-2015-890629. 
  4. "A walkthrough of the sprawling Mahindra École Centrale Campus". https://www.youtube.com/watch?v=yJYqVD8hK4I. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சுபள்ளி&oldid=3711199" இலிருந்து மீள்விக்கப்பட்டது