மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம்

மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் (Medchal−Malkajgiri District), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் புதிதாக துவக்கப்பட்டது.[3] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மெட்சல் நகரம் ஆகும்.

மெட்சல்-மல்கஜ்கிரி
Location of மெட்சல்-மல்கஜ்கிரி
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
தலைமையிடம்சமீர்பேட்டை
அரசு
 • மாவட்ட ஆட்சியர்ஸ்ரீ டாக்டர் எஸ்.ஹரிஷ், இ.ஆ.ப
பரப்பளவு
 • மொத்தம்1,084 km2 (419 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்24,40,073
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
தொலைபேசி+91
வாகனப் பதிவுTS-08
இணையதளம்medchal-malkajgiri.telangana.gov.in

இம்மாவட்டத்தின் வாகன குறியீடு எண் TS–08 ஆகும்.[4]

அமைவிடம்

தொகு
 
மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின் இரண்டு வருவாய் கோட்டங்கள்

இம்மாவட்டத்தின் வடக்கில் மேடக் மாவட்டம், வடகிழக்கில் சித்திபேட்டை மாவட்டம், கிழக்கில் யதாத்ரி புவனகிரி மாவட்டம், தென்கிழக்கில் ரங்காரெட்டி மாவட்டம், தெற்கில் ஐதராபாத் மாவட்டம், தென்மேற்கிலும் ரங்காரெட்டி மாவட்டம், வடமேற்கில் சங்கர்ரெட்டி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை

தொகு

5,005.98 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[5] மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 25,42,203 ஆகும். இம்மாவட்டம், தெலங்கானா மாநிலத்தில், ஐதராபாத் மாவட்டத்திற்கு அடுத்த இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகும்.

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் கீசரா மற்றும் மல்கஜ்கிரி என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 14 வருவாய் வட்டங்களயும் கொண்டுள்ளது.[3] புதிதாக துவக்கப்பட்ட இம்மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஆட்சியர் எம். வி. ரெட்டி ஆவார்.[6]

வருவாய் வட்டங்கள்/மண்டல்கள்

தொகு

மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின் 14 மண்டல்களின் விவரம்:[3][7]

வ. எண் மல்கஜ்கிரி வருவாய் கோட்டம் # கீசரா வருவாய் கோட்டம்
1 அல்வால் 1 கேட்கேசர்
2 பச்சூபள்ளி 2 கப்ரா
3 பாலாநகர் 3 கீசரா
4 துண்டிக்கல் கண்டிமாய்சம்மா 4 மெட்சல்
5 குகட்பள்ளி 5 மெடிப்பள்ளி
6 மல்கஜ்கிரி 6 சமீர்பேட்டை
7 குத்புல்லப்பூர் 7 உப்பல்

இதனையும் காண்க

தொகு

மேற்கோளகள்

தொகு
  1. https://medchal-malkajgiri.telangana.gov.in/geographical-area/
  2. https://medchal-malkajgiri.telangana.gov.in/population/
  3. 3.0 3.1 3.2 "Medchal−Malkajgiri district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 30 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
  4. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016. 
  5. "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  6. "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016. 
  7. "Medchal-Malkajgiri District Map | District Medchal Malkajgiri, Government of Telangana | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-26.

வெளி இணைப்புகள்

தொகு