சித்திபேட்டை மாவட்டம்
சித்திபேட்டை மாவட்டம் (Siddipet district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [1] மேடக் மாவட்டம், கரீம்நகர் மாவட்டம் மற்றும் வாரங்கல் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, சித்திபேட்டை மாவட்டம் அக்டோபர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது.
இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சித்திபேட்டை நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–36 ஆகும்.[2]
மாவட்ட எல்லைகள்
தொகுசித்திபேட்டை மாவட்டம், கரீம்நகர் மாவட்டம், மேடக் மாவட்டம், வாரங்கல் கிராமபுற மாவட்டம், மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம், காமாரெட்டி மாவட்டம், யதாத்ரி புவனகிரி மாவட்டம் மற்றும் ராஜன்னா சிர்சில்லா மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டது.
மக்கள் தொகையியல்
தொகு3425.19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சித்திபேட்டை மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 10,65,127 ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர். நகர்புற மக்கள் தொகை 38.50% ஆகவும், கிராமப்புற மக்கள் தொகை 8405% ஆகவும் உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 277 நபர்கள் வீதம் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 5.54% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 1,07,962 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 57.75% ஆகவும், ஆண்களின் எழுத்தறிவு 67.70% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 47.87%ஆக உள்ளது. பட்டியல் சமூக மக்கள் தொகை 1,44,952 ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 1,48,162 ஆகவும் உள்ளது.[3]
மாவட்ட நிர்வாகம்
தொகுசித்திபேட்டை மாவட்டம் கஜ்வெல், சித்திபேட்டை மற்றும் உஸ்னாபாத் என மூன்று வருவாய் கோட்டங்களையும், 22 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது. [4][1] புதிதாக நிறுவப்பட்ட இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் வெங்கடரமண ரெட்டி ஆவார்.[5]
வருவாய் வட்டங்கள்/மண்டல்கள்
தொகுசித்திபேட்டை வருவாய் கோட்டம் | கஜ்வெல் வருவாய் கோட்டம் | உஸ்னாபாத் வருவாய் கோட்டம் |
---|---|---|
சித்திபேட்டை (நகர்புறம்) | கஜ்வெல் | உஸ்னாபாத் |
சித்திபேட்டை (கிராமப்புறம்) | ஜெகதேவ்பூர் | அக்கண்ணாபேட்டை |
நாங்கூர் | கொண்டபாக் | கொகிதா |
சின்னகோடூர் | முலுக் | பெஜ்ஜங்கி |
தொகுதா | மர்கூக் | மட்டூர் |
தௌல்தாபாத் | வர்கல் | |
மீர்தோட்டி | ராய்போல் | |
துப்பாக் | ||
செரியல் | ||
குமாரவள்ளி |
கல்வி
தொகுஇம்மாவட்டத்தில் 1375 பள்ளிகளும், 74 இளையோர் கல்லூரிகளும், 18 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 9 தொழில் நுட்பம் & பொறியியல் கல்லூரிகளும், 3 பாலிடெக்னிக் நிறுவனங்களும் உள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Siddipet district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 11 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
- ↑ "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016.
- ↑ SIDDIPET DISTRICT PROFILE
- ↑ Name of the Mandals and Villages in Siddipet District
- ↑ "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016.
வெளி இணைப்புகள்
தொகு- சித்திபேட்டை மாவட்ட இணையதளம்
- தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம் பரணிடப்பட்டது 2020-08-11 at the வந்தவழி இயந்திரம்