ராஜன்னா சிர்சில்லா மாவட்டம்

ராசன்னா சிர்சில்லா மாவட்டம் (Rajanna Sircilla district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]கரீம்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் 11 அக்டோபர் 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது. [2] இம்மாவட்டத்தின் தலைமையிடமான சிர்சில்லா நகரம் விசைத்தறிக்கூடங்கள் அதிகம் கொண்டது.

தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
ராசன்னா சிர்சில்லா மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள்

புவியியல்தொகு

2019 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இம்மாவட்டத்தைச் சுற்றி கரீம்நகர் மாவட்டம், காமாரெட்டி மாவட்டம், மற்றும் சித்திபேட்டை மாவட்டங்கள் உள்ளது. கோதாவரி ஆற்றின் துணை ஆறான மனேரு ஆறு இம்மாவட்டத்தின் வழியாக பாய்கிறது. .

மக்கள் தொகையியல்தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 2030.89 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 5,46,121 ஆகும். இம்மாவட்டத்தின் சராசரி எழுத்தறிவு 62.71% ஆகவும், பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1014 வீதம் உள்ளனர். இம்மாவட்டத்தின் வாகனப் பதிவு எண் TS–23 ஆகும். [3]

அரசியல்தொகு

இம்மாவட்டம், சிர்சில்லா, வெமுலவாடா, சோப்பதண்டி மற்றும் மனகொண்டூர் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்டம் கரீம்நகர் மக்களவைத் தொகுதியில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்தொகு

இம்மாவட்டம் சிர்சில்லா எனும் ஒரு வருவாய் கோட்டமும், 13 வருவாய் வட்டங்களையும் கொண்டது.[4]இம்மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஆட்சியர் டி. கிருட்டிண பாசுகர் ஆவார்.[5]

மாவட்டத்தின் பிற தகவல்கள்தொகு

இம்மாவட்டத்தின் வெமுலவாடா நகரத்தில் பண்டைய கோயிலான இராசராசசுவரி கோயில் அமைந்துள்ளது. வெமுலவாடா அருகே நம்பள்ளி எனுமிடத்தில் இலக்குமி நரசிம்மர் கோயில் உள்ளது.

கி பி 750 - 973 காலத்தில் ஆண்ட வெமுலவாடா சாளுக்கியர்களின் பாறை கல்வெட்டுகள் வெமுலவாடா பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016. 
  2. "Rajanna district" (PDF). New Districts Formation Portal. 15 பிப்ரவரி 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 11 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016. 
  4. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. 9 அக்டோபர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016. 

வெளி இணைப்புகள்தொகு

பகுப்பு:தெலங்காணா கோயில்கள்