கஜபதி கார்வபங்கா

கன்னடத் திரைப்படம் (1989)


கஜபதி கார்வபங்கா (Gajapathi Garvabhanga)கன்னட மொழியில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய நகைச்சுவைப் படம்.இதை எம்.எஸ்.ராஜசேகர் இயக்கியுள்ளார்.இப்படத்தை நடிகர் ராஜ்குமாரின் தயாரிப்பு நிறுவனமான பூர்ணிமா எண்டர்பிரைசஸ் தயாரித்தது. இந்தப் படத்தில் அவரது இரண்டாவது மகன் ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் மலாஷ்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.நடிகர்கள் தீரேந்திர கோபால்,ஸ்ரீநாத் மற்றும் ஹொன்னவள்ளி கிருஷ்ணா ஆகியோர் இப்படத்தில் அடங்குவர்,இந்தப்படம் திரையரங்குகளில் 365 நாட்கள் ஓடியது.ராகவேந்திர ராஜ்குமாரின் முந்தைய திரைப்படமான நஞ்சுண்டி கல்யாணாவும் நகைச்சுவை திரைப்படமாகும்.இப்படம் அதே நடிகர்கள் மற்றும் குழுவினரை உள்ளடக்கிய திரைப்படமாகும்.

கஜபதி கார்வபங்கா
இயக்கம்எம்.எஸ்.ராஜசேகர்
தயாரிப்புபார்வதாம்மா ராஜ்குமார்
கதைடி.என். நரசிம்மன் (கதை)
திரைக்கதைசி. உதயசங்கர்
இசைஉபேந்திர குமார்
நடிப்புராகவேந்திரா ராஜ்குமார்
மலாஷ்ரி
ஒளிப்பதிவுவி.கே.கண்ணன்
படத்தொகுப்புஎஸ்.மனோகர்
விநியோகம்ஸ்ரீ தக்ஷயானி கம்பெனிஸ்
வெளியீடு1989
ஓட்டம்2 மணி 30 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடா

நடிகர்கள்

தொகு
  • ராகவேந்திரா ராஜ்குமார் என்ற கிஷோர்
  • மலாஷ்ரி என்ற சௌமியா
  • கே.எஸ்.அஸ்வத் என்ற ரங்கண்ணா மேஷ்த்ரு
  • ஸ்ரீநாத் என்ற ஆனந்த் மேஷ்த்ரு
  • தீரேந்திர கோபால் என்ற கஜபதி
  • சங்கீதா
  • ஹொன்னவல்லி கிருஷ்ணா என்ற "குடுர்" கிருஷ்ணா
  • மைசூர் லோகேஷ்
  • மந்தீப் ராய்
  • டோடன்னா
  • டோம்பரா கிருஷ்ணா சுரேஷ்
  • கில்லர் வெங்கடேஷ்
  • நீக்ரோ ஜானி
  • சிவராம்
  • அபிநயா
  • எம்.எஸ்.உமேஷ் திப்பய்யா
  • டென்னிஸ் கிருஷ்ணா

பாடல்கள்

தொகு

அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் உபேந்திர குமார். 

# பாடல்பாடகர் (கள்) நீளம்
1. "ஹோசா ராகவிடு"  ராகவேந்திரா ராஜ்குமார், மஞ்சுலா குருராஜ்  
2. "ஜடக குதுரே"  மஞ்சுலா குருராஜ்  
3. "தாரகரி தயம்மா"  ராகவேந்திரா ராஜ்குமார்  
4. "மதுவேயா வயசு"  ராகவேந்திரா ராஜ்குமார், மஞ்சுலா குருராஜ்  
5. "ஒலிடா ஸ்வரகலு"  ராகவேந்திரா ராஜ்குமார், மஞ்சுலா குருராஜ், குசுமா, மதுசூதன்  

மேற்கோள்கள்

தொகு
  1. https://archive.today/20130218014038/http://popcorn.oneindia.in/movie-cast/7876/gajapathi-garvabhanga.html
  2. http://www.raaga.com/channels/kannada/music/Upendra_Kumar.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜபதி_கார்வபங்கா&oldid=3954314" இலிருந்து மீள்விக்கப்பட்டது