ராகவேந்திரா ராஜ்குமார்

ராகவேந்திரா ராஜ்குமார் (கன்னடம்: ರಾಘವೇಂದ್ರ ರಾಜಕುಮಾರ) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் ஆவார். அதிகமாக கன்னடத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நன்கறியப்பட்ட கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் - பர்வதம்மா இணையரின் இரண்டாவது மகனாவார்.

ராகவேந்திரா ராஜ்குமார்
பிறப்புஆகத்து 15, 1965 (1965-08-15) (அகவை 59)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்ரகண்ணா
பணிநடிகர், தயாரிப்பாளர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1988–தற்போது வரை
பெற்றோர்ராஜ்குமார்,
பர்வதம்மா ராஜ்குமார்
வாழ்க்கைத்
துணை
மங்களா ராகவேந்திரா
பிள்ளைகள்வினய் ராஜ்குமார்
குரு ராஜ்குமார்
உறவினர்கள்சிவராஜ்குமார் (சகோதரர்)
புனீத் ராஜ்குமார் (சகோதரர்)
இலட்சுமி (சகோதரி)
பூர்ணிமா (சகோதரி)

இவர் கன்னடத் திரைப்படத் துறையில் உள்ள புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராவார். இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த பல்வேறு திரைப்படங்கள் மிகச்சிறந்த வெற்றிபெற்ற திரைப்படங்களாகும். தற்போது கன்னடத் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.[1] இவரது தயாரிப்பில், புனீத் ராஜ்குமார் நடித்த ஜாக்கி திரைப்படம் சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படமாகும்.[2] இவரது சகோதரரான புனீத் ராஜ்குமாரின் திரை வாழ்க்கையை வடிவமைத்ததில் இவருக்கு ஒரு பெரும்பங்கு உண்டு.

இவரது மகன் வினய் ராஜ்குமார் நடிப்பில் அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கான அறிவிப்புவிழா அட்சய திருதியை நாளில் நடைபெற்றது. இவ்விழாவில் கன்னடத் திரைப்படத்துறையில் உள்ள முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திரைப்பட விபரம்

தொகு

நடித்த திரைப்படங்கள்

தொகு

தயாரித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் இதர குறிப்புகள்
1987 சுருதி செரிதாக [3]
2010 ஜாக்கி
2012 அண்ணா பாண்ட்
2013 யாரு கூகாதளி

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகவேந்திரா_ராஜ்குமார்&oldid=3986280" இலிருந்து மீள்விக்கப்பட்டது