கஞ்சியா ஏரி

கஞ்சியா ஏரி (Kanjia Lake) இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள, புவனேசுவரின் வடக்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஓர் இயற்கை ஏரியாகும். ந்கரத்தின் முக்கிய ஏரியான இது 75 எக்டேர் (190 ஏக்கர்) பரப்பளவில் வியாபித்துள்ளது. இசுகூபா மூழ்கல் எனப்படும் ஆழ்கடலில் குதிக்கும் வசதியுடன் கூடிய இந்த ஏரி மொத்தமாக 105 எக்டேர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. பன்முக பல்லுயிர் வளம் கொண்டதாகவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாகவும் நகரின் சுற்றுச்சூழலை பராமரிக்கவும் கஞ்சியா ஏரி உதவுகிறது.[1]

கஞ்சியா ஏரி
Kanjia Lake
Location of the lake in India.
Location of the lake in India.
கஞ்சியா ஏரி
Kanjia Lake
அமைவிடம்இந்தியா
ஆள்கூறுகள்20°24′05″N 85°49′11″E / 20.401332°N 85.819734°E / 20.401332; 85.819734
வகைஏரி

ஏரிகளின் சுற்றுச்சூழல் தொகு

37 வகையான பறவைகள், 20 வகை ஊர்வனங்கள், 10 வகை உயிரிப்பினங்கள், 46 வகையான மீன்கள் மற்றும் மூன்று வகை இறால்கள், 10 வகை துணை - இணைக்கப்பட்ட பெருநீர்த்தாவரங்கள், 14 இனங்கள் மிதக்கும் பெருநீர்த்தாவரங்கள் மற்றும் 24 இனங்கள் வெளிப்படையான பெருநீர்த்தாவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. கட்டுப்பாடற்ற கற்சுரங்க திடக் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலமும், அதன் வட்டப்பகுதிகளில் அஸ்திவாரங்களை நிர்மாணிப்பதற்கும் இந்த ஏரி அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.[2][3]

கட்டுப்பாடற்ற குவாரி, திடக்கழிவுகள் மற்றும் அபாயகரமான கட்டுமானம் ஆகியவற்றினால் ஏர் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.[4][5]

நந்தன் கானன் விலங்கியல் பூங்காவின் ஒரு பகுதியாக கஞ்சியா ஏரி திகழ்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Report on the celebration of the WWD-2008 at Kanjia Lake, Odisha". Ramsar Convention on Wetlands. பார்க்கப்பட்ட நாள் 27 January 2013.
  2. "Nandankanan lake chokes". www.telegraphindia.com (ஆங்கிலம்). © 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-24. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. Kanjia lake shrinking?
  4. "Kanjia lake shrinking?". The Hindu. 10 August 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/article585769.ece. பார்த்த நாள்: 27 January 2013. 
  5. "Nandankanan lake chokes - Encroachment threat to wetlands". The Telegraph. 30 December 2012. http://www.telegraphindia.com/1121230/jsp/odisha/story_16377316.jsp#.UQUsb79woWU. பார்த்த நாள்: 27 January 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சியா_ஏரி&oldid=3928453" இலிருந்து மீள்விக்கப்பட்டது