கடக்வாஸ்லா அணை
கடக்வாஸ்லா அணை(மராத்தி:खडकवासला, English:Khadakwasla) இந்தியா மகாராட்டிரம் மாநிலம் புனே நகரத்திற்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள அணையாகும். புனேவின் நீர் ஆதாரங்களில் முக்கியமான ஒன்று. இதனருகே பல் மருத்துவ மையமும், கால்நடை மருத்துவமனையும், தேசிய பாதுகாப்பு அகாதமியும், மத்திய நீர் மற்றும் மின்சார ஆய்வு நிலையமும் (Central Water & Power Research Station) உள்ளது[1]. சிறிது தொலைவில் சிங்க்காட் கோட்டையும், பான்ஷெத் மற்றும் வாரஸ்காவ் இரட்டை அணைகளும் உள்ளன. இவ்வணை முதன்முதலில் 1880ல் கட்டிமுடிக்கப்பட்டது. மயில் கூடம், குட்ஜே கிராமம், நீலகண்டேஸ்வரர் போன்ற சுற்றுலா தளங்கள் இருப்பதால் மழைக் காலங்களில் மக்கள் அதிகம் இங்கு வருகிறார்கள்.
கடக்வாஸ்லா அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | Khadakwasla Dam |
அமைவிடம் | புனே, மகாராட்டிரம் இந்தியா |
திறந்தது | 1869 |
உரிமையாளர்(கள்) | மகாராட்டிர அரசு |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | முடா ஆறு |
உயரம் | 31.79 m |
நீளம் | 1939 m |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | கடக்வாஸ்லா ஏரி |
மொத்தம் கொள் அளவு | 374 Million Cubic Meter |
சிறப்புகள்
தொகுஇந்த அணை 32.90 m (107.9 அடி) உயரமும் 1,539.00 m (5,049.21 அடி) நீளமும் கொண்டதாகும். இதன் நீர் கொள்ளளவு 1,170.00 km3 (280.70 cu mi) மற்றும் மொத்த கொள்ளளவு86,000.00 km3 (20,632.50 cu mi) ஆகும்[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ [1]
- ↑ "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2012-01-21.