கடம்பங்குடி காமாட்சி அம்மன் கோயில்

கடம்பங்குடி காமாட்சி அம்மன் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், கடம்பங்குடியில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோயிலாகும்.

வரலாறு

தொகு

அருள்மிகு காமாட்சியை நடுக்காவேரிக்கு வடக்கில் காவிரியின் கரையோரத்தில் ஒரு பெட்டி மிதந்து வந்துள்ளது அப்போது அங்கே வேலை பார்த்தவர்கள் கண்டெடுத்துள்ளார்கள். அந்த பெட்டியினுள் ஓர் அம்மன் சிலை இருந்ததைக் கண்டு, அவர்களுக்குள் யாருக்கு அம்மன் சொந்தம் என சண்டையிட்டார்களாம். பின்பு முடிவாக உடுக்கையடித்து கேட்களாம் என சிலர் சொல்ல உடனே ஏற்பாடு செய்து உடுக்கையடித்துப் பார்த்தார்கள். நான் காமாட்சி எனவும் என்னை கடம்பன்குடி கிராமத்தில் அருள்பாலிக்கவே இங்கு வந்துள்ளேன் என கூற அம்மனுக்கு கடம்பன்குடியில் திருக்கோயில் எழுப்பி காமாட்சி அம்மனை அருள்பாளிக்கும் தெய்வமாக இன்றுவரை வணங்குகிறார்கள்.[சான்று தேவை]

விழாக்கள்

தொகு

மாசி மாதத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி அன்று காமாட்சி அம்மன் கிராமத்தின் அனைத்து தெருக்களிலும் நாக கிரகமாக வலம் வருவார். விழாவில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பங்குனி மாதத்தில் வீரசிங்கம்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் இருந்து பூச்சொரிதல் விழாவிற்கு பூ எடுத்து செல்லப்படும்.

ஆடிமாதத்தில் திருவிளக்கு பூஜை மிகவும் விமர்சையாக நடைபெறும்.