கடம்பநாடு பகவதி கோயில்
கடம்பநாடு பகவதி கோயில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் [1] கடம்பநாடு என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் அடூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், மண்ணடியிலிருந்து 6.6 கி.மீ. தொலைவிலும், சாஸ்தம்கோட்டாவிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
மூலவர்
தொகுஇக்கோயில் பகவதி கோயில் என்றழைக்கப்படுகின்து. [2] இங்கு பத்ரா தேவி, தர்மசாஸ்தாவு, துர்க்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. கோயிலின் 10 நாள் ஆண்டு விழா மலையாள மீனம் மாதத்தில் (ஏப்ரல் மாதம்) கொடியேற்றத்துடன் தொடங்கி கொடியிறக்கத்துடன் முடிவடைகிறது. 10 வது நாளில் ஆறாட்டு, தேவிக்கும் சாஸ்தாவுக்கும் புனித நீராடல் நிகழ்த்தப்பெறுகிறது. அப்போது பல யானைகளுடன் ஒரு பெரிய ஊர்வலம் நடைபெறும்.
நிர்வாகம்
தொகுஇந்தக் கோயில் நாயர் சர்வீஸ் சொசைட்டியைச் சேர்ந்த கரயோகம் எண்.232ஆல் நிர்வகிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kadampanad Bhagavathy Temple - Festival". 2020-12-04. பார்க்கப்பட்ட நாள் 2023-11-19.
- ↑ Kadampanad Bhagavathy Temple