பத்திரகாளி

இந்து தெய்வம்

பத்யிரகாளி (Bhadrakali , சமக்கிருதம்: भद्रकाली , வங்காள மொழி: ভদ্রকালী , தமிழ்: பத்ரகாளி , தெலுங்கு: భద్రకాళి , மலையாளம்: ഭദ്രകാളി , கன்னடம்: ಭದ್ರಕಾಳಿ , குடகு மொழி : ಭದ್ರಕಾಳಿ) (பொல்லின் பொருள் "கண்ணியமான காளி") [1] என்பவர் தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான ஒரு இந்து மதம் தெய்வம் ஆவார். தேவி மகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரிய தெய்வமான சக்தி அல்லது ஆதி பராசக்தி ( துர்க்கை, தேவி, மகாதேவி, அல்லது மகாமயை என்றும் அழைக்கப்படுகிறார்) என்ற துடியான தெய்வ வடிவங்களில் இவரும் ஒருவர். கேரளத்தில் வணங்கப்படும் மகாகாளி, சாமுண்டி மற்றும் காளி போன்ற தெய்வங்கள் பெரிய தெய்வமான பத்திரக்காளியின் பிரபலமான வடிவங்களாகும். இதனால். கேரளத்தில் இவர் நல்லதைப் பாதுகாக்கும் மகாகளியாகவும் நன்மை மற்றும் நல்வாய்ப்பின் (அதிர்ஷ்டம்) வடிவமாகக் காணப்படுகிறார்.

பத்திரகாளி
சமசுகிருதம்भद्र कालि
வகைதேவி, ஆதிசக்தி, துர்க்கை
இடம்மணித்வீபம்
துணைவீரபத்திரர்
நூல்கள்காளிகா புராணம், சிவ புராணம்

இந்த தெய்வம் மூன்று கண்கள், மற்றும் நான்கு, பதினாறு அல்லது பதினெட்டு கைகளைக் கொண்டவராக குறிக்கப்படுகிறார். இவர் கைகளில் பல ஆயுதங்களை ஏந்தியவாறு உள்ளார். இவருடைய தலையைச் சுற்றிலுமிருந்து தீப்பிழம்புகள் பாய்கின்றன, இவரது வாயில் இருந்து கோரைப் பற்கள் நீண்டுள்ளன. இவரது வழிபாடு சப்தகன்னியரின் தாந்த்ரீக பாரம்பரியத்துடனும், பத்து மகா வித்யக்களின் பாரம்பரியத்துடனும் தொடர்புடையது மற்றும் சக்தியின் அகன்ற குடையின் கீழ் வருகிறது. சர்க்காரா, கொடுங்கல்லூர், ஆட்டுக்கல், செட்டிகுளங்கரா, திருமந்தம்குன்னு மற்றும் சோட்டனிகாரை ஆகியவை கேரளத்தில் உள்ள பிரபலமான பத்ரகளி கோயில்கள் ஆகும்.

பத்ரகாளி முதன்மையாக நான்கு வடிவங்களில் வணங்கப்படுகிறார்: தாருகாஜித் (தாரிகா அரக்கனைக் கொன்றவளாக), தக்ஷாஜித் (தக்ஷனைக் கொன்றவளாக), ருருஜித் (ருரு என்ற அரக்கனைக் கொன்றவளாக) மற்றும் மஹிஷாஜித் (மகிஷாசூரனைக் கொன்றவளாக).

சொற்பிறப்பு

தொகு

சமஸ்கிருதத்தில், பத்ரா என்றால் ஒழுக்கமானவர் என்று பொருள் . [1] இந்த பெயரின் ஒரு முக்கிய சமய விளக்கம் என்னவென்றால், பத்ரா என்ற சொல்லானது 'ப' மற்றும் 'டிரா' என்ற சொற்களின் சேர்கையில் இருந்து வந்தது, 'ப' என்ற எழுத்தின் பொருள் தேவநகிரியில் 'மாயை' அல்லது 'மாயா' என்றும், 'டிரா' என்பது மீஉயர்நிலை என்ற பொருளைக் கொண்டதாக பயன்படுத்தப்படுகிறது, அதாவது 'மிக / மிகப் பெரியது. ' இது பத்ராவின் பொருளை மகா மாயா என்று ஆக்குகிறது.[2][3] எனவே 'பத்ரா காளி' என்ற சமஸ்கிருத பெயரை இந்தியில் 'மகாமயா காளி' என்று மொழிபெயர்க்கலாம்.

தோற்றுவாய்கள்

தொகு

பத்ரகாளியின் தோற்றம்- திருபிறப்பு அல்லது அவதாரம் குறித்து குறைந்தது ஐந்து பாரம்பரிய பதிப்புகள் உள்ளன:

தாரிகா வதம்

தொகு

காரளத்தில் இன்றும் பத்ரகாளி வழிபாடு காணப்படுகிறது. மார்கண்டேய புராணத்தில் தோன்றிய ஒரு கதையை அடிப்படையாகக் கொண்ட தாரிகாவைக் வதம் செய்தவர் "தரிகாஜித்" என்று பொதுவாக வழிபடுகிறார். இது "பத்ரகாளி மகாத்மியம்" அல்லது "தாருகா வதம்" என்று அழைக்கப்படுகிறது.

அசுரன் தாருகனுக்கு கற்பில் சிறந்த மனைவியான மனோதரி இருப்பதாகக் கூறப்பட்டது, இவர் தனது கணவரை யாரும் வெல்லமுடியாத ஒரு சிறப்பு மந்திரத்தை வைத்திருந்தார், இதனால் இந்த அசுரன் தன் மனைவியில் ஆற்றலால் நிரந்தரமான பாதுகாப்பைக் கொண்டிருந்தான். தாரிகா தன்னை யாரும் வெல்லமுடியாத ஆற்றலைப் பயன்படுத்தி லோங்களைத் துன்புறுத்தியும், தேவர்களின் லோகத்தைக் கைப்பற்றினான். அசுரன் தாரிகாவின் இந்தச் செயல்களைப் பற்றி அறிந்த சிவன் அறிந்ததும், இவர் தனது தீ உமிழும் மூன்றாவது கண்ணைத் திறந்தார். இதன் விளைவாக இந்த மூன்றாவது கண்ணில் இருந்து பத்ரகாளியின் பாரிய மூர்க்க வடிவம் வெளிப்பட்டது (இந்த அவதாரத்தில், தேவி அவரது மனைவி அல்ல, ஆனால் அவரது மகள். ) இவ்வாறு வெளிப்பட்ட பத்ரகளியை தாரிகாவை அழிக்கும்படி சிவன் கட்டளையிட்டார். இந்த பத்ரகாளியின் வாகனமாக வேதாளம் இருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "This domain has been registered for a customer by nicsell". spokensanskrit.de.
  2. "Sanskrit Dictionary". sanskritdictionary.com. Archived from the original on 2016-01-07. பார்க்கப்பட்ட நாள் 2020-02-11.
  3. "A Practical Sanskrit Dictionary". Dsal.uchicago.edu. 2002-06-01. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்திரகாளி&oldid=3559291" இலிருந்து மீள்விக்கப்பட்டது