தேவி மகாத்மியம்

தேவி மகாத்மியம் (Devi Mahatmyam), இதனை துர்காசப்தசதீ (Durgā Saptashatī) (दुर्गासप्तशती) அல்லது சண்டி பாடம் (चण्डीपाठः) என்றும் அழைப்பர். [1] தேவியின் மகிமைகளை எடுத்துக் கூறும் தேவி மகாத்மியம் நூல் 13 அத்தியாயங்கள், 700 செய்யுட்களுடன் கூடியது. கொண்டது. [2][1] தேவி உபாசகர்களுக்கு, தேவி பாகவத புராணம் மற்றும் தேவி உபநிடதங்களுடன், தேவி மகாத்மியம் நூலும் மிக முக்கியமானதாக உள்ளது.[3][4] [5]

தேவி துர்கை எருமைத் தலையன் மகிசாசூரனை சூலத்தால் கொல்லும் 9ஆம் நூற்றாண்டின் சிற்பம், காஷ்மீர், இந்தியா
தேவி துர்கை எருமைத் தலையன் மகிசாசூரனை சூலத்தால் கொல்லும் 13ஆம் நூற்றாண்டின் சிற்பம், கர்நாடகா, இந்தியா


தேவி மகாத்மியம் நூல், தேவியானவள் துர்கை, சண்டி போன்ற பல வடிவங்கள் எடுத்து மகிசாசூரன் போன்ற கோரமான தீய அரக்கர்களை போரில் வீழ்த்தும் கதைகளை கூறுகிறது. [6][7][8] அமைதிக் காலங்களில் தேவி இலக்குமியாகவும், சரசுவதியாகவும் காட்சியளிக்கிறாள்.[9]

தேவி மகாத்மியம் நூல், இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களிலும் மற்றும் நேபாளத்திலும் பிரபலமாக உள்ளது.[10] துர்கா பூஜையின் போது தேவி மகாத்மிய நூலின் சுலோகங்கள் துர்கை கோயில்களில் பாடப்படுகிறது.[11].[12][13]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Tracy Pintchman 2014, ப. 86.
  2. Coburn 1991, ப. 27-31.
  3. Constance Jones; James Ryan (2014). Encyclopedia of Hinduism. Infobase Publishing. p. 399. ISBN 978-0816054589.
  4. தேவி மகாத்தியம் – பாகம் 1
  5. தேவி மகாத்மியம் - பாகம் 2
  6. Rocher 1986, ப. 191-192.
  7. Tracy Pintchman 2014, ப. 20.
  8. June McDaniel 2004, ப. 215-216, 219-220.
  9. June McDaniel 2004, ப. 216-217.
  10. Dutt 1896, ப. 4.
  11. Gavin Flood (1996). An Introduction to Hinduism. Cambridge University Press. p. 181. ISBN 978-0-521-43878-0.
  12. Dalal 2014, ப. 118.
  13. David Kinsley 1997, ப. 30-35.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devi Mahatmya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

கூடுதல் வாசிப்பிற்கு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_மகாத்மியம்&oldid=4297083" இலிருந்து மீள்விக்கப்பட்டது