கடற்படையினருக்கான அறிவிப்பு
கடற்படையினருக்கான அறிவிப்பு (Notice to mariners) [1][2] என்பது ஊடுருவல் தடுப்பு பாதுகாப்பு, நீர்ப்பரப்பிற்குரிய தகவல்கள், நீரோட்டங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் மற்றும் ஊடுருவல் தடுப்பு கருவிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு ஆகும்.[3]
60 க்கும் மேற்பட்ட நாடுகள் கடற்படை அறிவிப்புக்கான கடல் வரைபடங்களை உருவாக்கியுள்ளன. இவ்வரைபடங்கள் மூன்று பகுதியாக அதாவது வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதம் இருமுறை அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை என பதிவுகள் மேம்படுத்தப்படுகிறது. உதாரணமாக ஐக்கிய இராச்சியம் கடற்படையில் வாரம் ஒருமுறை வரைபடங்கள் மேம்படுத்தப்படுகின்றன.[4]
அமெரிக்க கடற்படை
தொகுஅமெரிக்க ஐக்கிய நாடுகளில் கடற்படைக்குத் தேவையான கடல் வரைபடங்களை தேசிய புவியியல்-உளவுத்துறை நிறுவனம் வாரம் ஒருமுறை பதிவேற்றம் செய்து மேம்படுத்தி வழங்கி வருகிறது. தேசிய பெருங்கடல் சேவை என்ற அமைப்பும் அமெரிக்க கடலோர காவல்படையுமவர்களுடன் இணைந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வழிகாட்டுகிறது.
வரைபடங்களை சீர்திருத்துவது, எளிமைப்படுத்துவது, கலங்கரை விளக்கங்களை முறைப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கண்ட அமைப்புகள் இணைந்து செயல்படுத்துகின்றன.
கனடா
தொகுகனடாவில் அந்நாட்டு கடற்படைக்குத் தேவையான கடல் வரைபடங்களை கனடிய கடலோர காவல்படை Notice to Mariners என்ற அமைப்பு வழங்கி வருகிறது. இவ்வமைப்பு தேவையான தகவல்கள் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கங்களை மின்னணு பதிவுகளாக Notices to Mariners Notices to Mariners (NOTMAR) Web site பரணிடப்பட்டது 2021-04-19 at the வந்தவழி இயந்திரம் என்னும் இணையதளம் வாயிலாக மாதம் ஒருமுறை வழங்கி வருகிறது.[2] கனடா கடற்படை தங்களுக்குத் தேவையான தகவல்களை இவ்விணையதளம் வாயிலாக பதவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்கின்றனர்.
NOTMAR.gc.ca என்ற இவ்விணையதளம் 24x7 இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தகவல்களை வழங்கி வருகிறது. மேலும் பதிவு செய்து கொண்டுள்ள பயனாளிகளுக்கு அறிவிப்புகளை மின்னஞ்சல்களாக வார இறுதிகளிலும், மாத இறுதிகளிலும் அனுப்பி வருகிறது. மேலும் NOTMAR.gc.ca பதிவு செய்து கொண்டுள்ள பயனாளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட கடல் வரைபடங்களை பதிவேற்றம் (கனடா கப்பல் சட்டத்துக்கு உட்பட்டு) செய்து கொள்ளவும் அனுமதி வழங்கி உள்ளது.
மேலும் இவ்விணையதளத்தில் வரலாற்றுக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட கடல் வரைபடங்களையும், வரலாற்றுக் கால மாலுமிகள் கண்டுபிடித்த கடல் வழி பாதைகளும் மின்னணு வடிவத்தில் பதிவேற்றம் செய்து பார்வையிடும் வகையில் வழங்கியுள்ளது.
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுThe text of this article originated from sections 418 and 419 of The American Practical Navigator, a document produced by the government of the United States of America.
- ↑ "Maritime Safety Information". National Geospatial-Intelligence Agency.
- ↑ 2.0 2.1 Canadian Coast Guard NOTMAR Notice to mariners, accessed 27 June 2020.
- ↑ "Notice To Mariners What is a Notice to Mariners?". Woods Hole Oceanographic Institution. https://www.whoi.edu/what-we-do/explore/cruise-planning/cruise-planning-before-the-cruise/cruise-planning-notice-to-mariners/.
- ↑ United Kingdom Hydrographic Office, UKHO. "Notices to Mariners (NMs)". Notices to Mariners (NMs) (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-06-11.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
தொகு- Chapter 4: Nautical Publications - from the online edition of Nathaniel Bowditch's American Practical Navigator
- Notice to Mariners Online
- https://www.admiralty.co.uk/maritime-safety-information/admiralty-notices-to-mariners