கடலையெண்ணெய்

கடலையெண்ணை (Peanut Oil, Groundnut Oil), வேர்க்கடலையில் இருந்து எடுக்கப்படும் தாவர எண்ணெய் ஆகும். இது, கடலையின் வாசத்தைக் கொண்ட, நல்லெண்ணெய் போன்று சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயாகும்[1][2]. சீனா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெருமளவில் சமையலுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது.

காப்பு வேதிப்பொருளாக உயிர்ச்சத்து ஈ சேர்க்கப்பட்ட கடலையெண்ணை போத்தல்

பயண்கள்

தூய்மையாக்கப்படாத கடலையெண்ணெயின் புகையும் நிலை 320 °F/160 °C. இது நல்லெண்ணெய் போல ஒரு சுவையூட்டியாகவும் பயன்படுகிறது. தூய்மையாக்கப்பட்ட கடலையெண்ணெயின் புகையும் நிலை 450 °F/232 °C, இது உருளைக்கிழங்கு, வடை போன்றவரற்றை ஆழ வறுக்க பயன்படுகிறது.

கூட்டமைவு

இதன் பெரும்பான்மையாண கூட்டமைப்பு கொழுப்பு அமிலங்கள்ஆவன- ஒலெயிக் அமிலம் (46.8% ஒலெயினாக), லினொலெயிக் அமிலம் (33.4% லினொலெயினாக ), மேலும் பாமிடிக் அமிலம் (10.0% பாமிடினாக ). மேலும் இந்த எண்ணெயில் சிறிது ஸ்டீரியிக் அமிலம், அராகைடிக் அமிலம், பெஹெனிக் அமிலம், லிக்னோசெரிக் அமிலம் மற்றும் பல கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

சிலசமயங்களில் தேக்க ஆயுளை மேம்படுத்த வைட்டமின் ஈ போன்ற எதிர் ஆக்சிகரணிகள் சேர்க்கப்படுகின்றன.

ஊட்டச்சத்து உள்ளடக்கம்

USDA (யூ எஸ் வேளான் துரை) தகவல்களை அடிப்படையாகக் கொண்ட பின்வரும் அட்டவணைப்டி, 100 கிராம் வேர்க்கடலை எண்ணெயில் 17.7 கிராம் நிறைவுற்ற கொழுப்பு ( saturated fat), 48.3 கிராம் ஒற்றைச்செறிவிலாக் கொழுப்பு ( monounsaturated fat) மற்றும் 33.4 கிராம் பல்செறிவிலாக் கொழுப்பு (polyunsaturated fa.)உள்ளன.

                   கடலையெண்ணை                      

உணவூட்டம்சார்  மதிப்பு ஒவ்வொரு 100 கிராமில்

  ஆற்றல் 3,699 kJ (884 kcal)
மாவுச்சத்து 0 g
கொழுப்பு 100 g
நிறைவுற்ற கொழுப்பு 17 g
ஒற்றைச்செறிவிலாக் கொழுப்பு 46 g
பல்செறிவிலாக் கொழுப்பு 32 g
புரதம் 0 g
உயிர்ச்சத்துக்கள் (%DV)

Qty

உயிர்ச்சத்து  E (105%)

15.7 mg

கனிமங்கள்
துத்தநாகம் Zinc (0%)

0.01 mg

Other constituents
கொழுப்பு Cholesterol 0 mg
செலினியம் 0.0 mcg

Fat percentage can vary.
·         Units

·         μg = micrograms • mg = milligrams

·         IU = International units

Percentages are roughly approximated using US recommendations for adults.

Source: USDA Nutrient Database

                                   பொதுவான சமயல் கொழுப்புகளின் ஒப்பீடு(per 100 g )
கொழுப்பு வகை மொத்த

கொழுப்பு கி

நிறைவுற்ற கொழுப்பு கி ஒற்றைச்செறிவிலாக் கொழுப்பு கி பல்செறிவிலாக் கொழுப்பு கி புகையும் நிலை
சூரியகாந்தி எண்ணெய் 100 11 20 69 225 °C (437 °F)[8]
சூரியகாந்தி எண்ணெய் (உயர் ஒலெயின் உள்ளது) 100 12 84 [9] 4 [9]
சோயா மொச்சை எண்ணெய் 100 16 23 58 257 °C (495 °F)[8]
கநொலா எண்ணெய் (கடுகு குடும்பத்தைச் சேர்ந்த ரேப்விதை எண்ணெய்) 100 7 63 28 205 °C (401 °F)[9][10]
ஆலிவ் எண்ணெய் 100 14 73 11 190 °C (374 °F)[8]
மக்காச்சோள எண்ணெய் 100 15 30 55 230 °C (446 °F)[8]
கடலையெண்ணை 100 17 46 32 225 °C (437 °F)[8]
நெல் தவிட்டு எண்ணெய் 100 25 38 37 250 °C (482 °F)[11]
காய்கறி திடக்கொழுப்பு

வனஸ்பதி

71 23 8 37 165 °C (329 °F)[8]
பன்றிக்கொழுப்பு 100 39 45 11 190 °C (374 °F)[8]
கெட்டி இறைச்சி கொழுப்பு 94 52 32 3 200 °C (392 °F)
வெண்ணெய் 81 51 21 3 150 °C (302 °F)[8]
தேங்காய்  எண்ணெய் 100 86 6 2 177 °C (351 °F)

மேற்கோள்கள் தொகு

  1. Liu, Xiaojun; Jin, Qingzhe; Liu, Yuanfa; Huang, Jianhua; Wang, Xingguo; Mao, Wenyue; Wang, Shanshan (2011). "Changes in Volatile Compounds of Peanut Oil during the Roasting Process for Production of Aromatic Roasted Peanut Oil". Journal of Food Science 76 (3): C404–12. doi:10.1111/j.1750-3841.2011.02073.x. பப்மெட்:21535807. 
  2. "USA-Grown Peanut Sources - Peanut Oil". National Peanut Board. Archived from the original on 2008-06-11. பார்க்கப்பட்ட நாள் 2016-04-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலையெண்ணெய்&oldid=3547503" இலிருந்து மீள்விக்கப்பட்டது