கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு முகமை
கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு முகமை (MPEDA) என்பது கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய அரசு நிறுவனமாகும். இது கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் 1972 (1972 ஆம் ஆண்டின் எண் 13) சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 24, 1972 அன்று அமைக்கப்பட்டது.[1] இம்முகமையின் பணிகளாக அனைத்து வகையான மீன்வளங்களையும் உள்ளடக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல், தரப்படுத்தல், பதப்படுத்தி சந்தைப்படுத்தல், விரிவாக்கம் மற்றும் தொழில்துறையின் பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளித்தல் முதலியன.
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 24 ஆகத்து 1972 |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | கொச்சி, கேரளா, இந்தியா |
வலைத்தளம் | mpeda.gov.in |
இந்திய அரசின் வணிகத் துறையின் கீழ் செயல்படும் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு முகமை மீன்வள உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பணியினை மேற்கொள்கிறது. [2]
சேவைகள்
தொகு- கடல் உணவு ஏற்றுமதி வர்த்தகத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளைப் பதிவு செய்தல்
- வர்த்தகம் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பரப்புதல்
- வெளிநாட்டுக் கண்காட்சிகளில் பங்கேற்பதன் மூலமும், சர்வதேச கடல் உணவு கண்காட்சிகளை இந்தியாவில் ஏற்பாடு செய்வதன் மூலமும் வெளிநாட்டுச் சந்தைகளில் இந்தியக் கடல் தயாரிப்புகளை முன்வைத்தல்
- இன்சுலேட்டட் மீன் பெட்டிகளை விநியோகித்தல், மீன் இறங்கும் தளங்களை அமைத்தல், உறைப்பான் நிறுவனங்களை மேம்படுத்துதல், ஐ.க்யூ.எஃப் இயந்திரங்களை நிறுவுதல், மின் உற்பத்தி இயந்திர மேம்பாட்டுப்பணி, பனிக்கட்டித் தயாரிக்கும் இயந்திரங்களை நிறுவுதல், தரக் கட்டுப்பாடு ஆய்வகங்கள் அமைத்தல் போன்ற முக்கியமான வளர்ச்சி நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல்
- உவர்நீர் மீன் வளர்ப்பை ஊக்குவித்து இறால் ஏற்றுமதியினை பெருக்குதல்
- சோதனை மீன்பிடித்தல், கூட்டு முயற்சி மற்றும் பங்கேற்பு மீன்பிடித்தல் மூலம் ஆழ்கடல் மீன்பிடி திட்டங்களை மேம்படுத்துதல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "About MPEDA". Marine Products Export Development Authority. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Official Website of MPEDA