கடவுளின் தாய் தேவாலயம், வெட்டுக்காடு

கடவுளின் தாய் தேவாலயம் (போர்த்துக்கேய மொழி / இலத்தீன் மொழியில் Madre de Deus Church கடவுளின் தாய் தேவாலயம்) என்று அழைக்கப்படும் கத்தோலிக்க திருச்சபையானது, இந்தியாவில் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காடு எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு தேவாலயம் ஆகும்.[1]

கடவுளின் தாய் தேவாலயம்
கடவுளின் தாய் தேவாலயம்
8°29′39″N 76°54′01″E / 8.49418°N 76.90021°E / 8.49418; 76.90021
நாடுஇந்தியா
சமயப் பிரிவுகத்தோலிக்க திருச்சபை
வலைத்தளம்vettucaudchurch.com

வரலாறு

தொகு

இந்த தேவாலயம் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது.[2]இந்த தேவாலயம் 2010 முதல் 2017 வரை புதுப்பிக்கப்பட்டு,[3]எட்டு வருட சீரமைப்புக்குப் பிறகு 2018 சனவரி 31 அன்று லத்தீன் கத்தோலிக்க பேராயர் சூசா பாக்கியம் மீண்டும் திறந்து வைத்தார்.[4]

திருவிழா

தொகு

இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.[5]பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த தேவாலயத்திற்கு வருகிறார்கள்.[6]

அமைவிடம்

தொகு

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும், திருவனந்தபுரம் மத்திய இரயில் நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவிலும், கொச்சுவேலி இரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kerala tourism", Kerala tourism (in ஆங்கிலம்), 2024-05-12, பார்க்கப்பட்ட நாள் 2024-05-12
  2. "Kerala tourism", Kerala tourism (in ஆங்கிலம்), 2024-05-12, பார்க்கப்பட்ட நாள் 2024-05-12
  3. "Madre De Deus Church & Feast of Christ the King", New Indian Express (in ஆங்கிலம்), 2022-11-19, பார்க்கப்பட்ட நாள் 2024-05-14
  4. "Madre de Deus church to reopen today", deccanchronicle (in ஆங்கிலம்), 2018-01-31, பார்க்கப்பட்ட நாள் 2024-05-11
  5. "Vettukadu Feast", utsav.gov.in (in ஆங்கிலம்), 2024-05-13, பார்க்கப்பட்ட நாள் 2024-05-13
  6. "Vettucaud church fete begins today", Timesofindia (in ஆங்கிலம்), 2018-11-15, பார்க்கப்பட்ட நாள் 2024-05-13
  7. "Vettukadu Feast", utsav.gov.in (in ஆங்கிலம்), 2024-05-13, பார்க்கப்பட்ட நாள் 2024-05-13