கடவுள் கோயில்

அமெரிக்காவில் அமைந்துள்ள இந்துக் கோயில்

கடவுள் இந்து ஆலயம் (Kadavul Hindu Temple) என்பது அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள காவாய் தீவில் அமைந்துள்ள சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட யாழ்ப்பாண பாணி இந்து ஆலயமாகும். இது சைவ சித்தாந்த மடாலயத்தால் பராமரிக்கப்படுகிறது. இது ஹவாய் ஆதீனம் அல்லது ஹவாயின் இந்து மடாலயம் என்றும் அழைக்கப்படுகிறது.

கடவுள் கோயில்
கடவுள் கோயில்
அமைவிடம்
நாடு:அமெரிக்க ஐக்கிய நாடுகள்
மாநிலம்:ஹவாய்
அமைவு:கப்பா , ஹவாய்
ஆள்கூறுகள்:22°5′18″N 159°20′16″W / 22.08833°N 159.33778°W / 22.08833; -159.33778
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:யாழ்ப்பாண பாணி கோயில்
வரலாறு
அமைத்தவர்:சைவ சித்தாந்த மடாலயம்
இணையதளம்:www.himalayanacademy.com

பின்னணி தொகு

கடவுள் என்பது பழங்காலத் தமிழ்ச் சொல்லாகும். இதன் பொருள் "உள்ளார்ந்த தன்மையுடையவர் மற்றும் அப்பாற்பட்டவர்" என்பதாகும்.[1] கடவுள் கோயில் 1973 ஆம் ஆண்டு சிவாய சுப்பிரமணியசுவாமி என்பவரால் நிறுவப்பட்டது. ஹவாயின் சைவ சித்தாந்த மடாலயம் பராமரிப்பில் உள்ள இரண்டு கோவில்களில் இதுவும் ஒன்று. மற்றொரு கோவில் இறைவன் கோயில். 39 அங்குல உயரமுள்ள குவார்ட்சு சிவலிங்கம் கோயிலின் மையச் சின்னமாக விளங்குகிறது. சிவலிங்கம் இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஆறு பக்க, ஒற்றை முனை கொண்டதாக நம்பப்படுகிறது. கடவுள் கோயில் வயிலுவா ஆற்றுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.[2][3] மேலும், வயிலுவா மலையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.[4] சிவலிங்கம் 320 கிலோ எடையில், 39 அங்குல உயரமுள்ள, வெட்டப்படாத குவார்ட்சு படிகமாகும்.[5][4]

புகைப்படங்கள் தொகு

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. "All about Kauai's Hindu Monestory".
  2. "kadavul temple".
  3. "kadavul temple".
  4. 4.0 4.1 "All about Kauai Hindu monestery".
  5. "Kadavul temple".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுள்_கோயில்&oldid=3799772" இலிருந்து மீள்விக்கப்பட்டது