இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. முத்தொள்ளாயிரம் என்னும் நூல் கடுங்கோன் என்னும் பெயரால் பாண்டிய மன்னன் ஒருவனைச் சுட்டுகிறது. [1] வேறு சான்றுகள் கடுங்கோனைப் பற்றிக் கிடைக்காததால் இவனை வரலாற்றுக்கு முந்தைய தொல்பழங்காலப் பாண்டியர் பட்டியலில் ஒருவனாகக் கொள்ளலாம். களப்பிரர்களை அழித்த இடைக்காலப் பாண்டியன் ஒருவனும் கடுங்கோன் எனப் பெயர் பெற்றுள்ளான்.

‘கடுங்கோ’ என்னும் பெயருடன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் அரசனும், பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ என்னும் புலவர்களும் காணப்படுகின்றனர்.

கடுங்கோன், கடுங்கோ என்னும் பெயர்களை எண்ணும்போது முதல் இரண்டு தமிழ்ச்சங்கங்கள் இருந்த குமரிக் கண்டத்தில் சேர சோழ பாண்டியர் பாகுபாடு இல்லை எனக் கொள்ள இடமுண்டு.

ஆயின் குமரிக்கண்டத் தமிழர் பாண்டியர் எனத் தகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. முத்தொள்ளாயிரம் 47


"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுங்கோன்&oldid=1569678" இலிருந்து மீள்விக்கப்பட்டது