கடைநிலை விடை

புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் கடைநிலை விடை என்பது ஒன்று.

புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் கடைநிலை விடை என்பது ஒன்று. இது பாடாண் திணையின் துறை. புறநானூற்றில் இத்துறைப் பாடல் ஒன்றே ஒன்று உள்ளது.

இலக்கண நூல் விளக்கம்

தொகு
  • புறப்பொருள் வெண்பாமாலை பாடாண் திணையின் 48 துறைகளில் இது குறிப்பிடப்படவில்லை. பரிசில் விடை துறையின் மற்றொரு பகுதி போலும். புறநானூற்றுப் பாடல் பகுப்பு இதனை விளக்கும் வகையில் இரு துறைகளாகவும் கொள்ளலாம் எனக் குறிப்பிடுகிறது.
  • தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இரண்டு இலக்கண நூல்களிலும் குறிப்பிடப்படாத இந்தத் துறை புறநானூற்றுத் திணை, துறை பகுப்புக்களுக்கு மூலமான, மறைந்துபோன பன்னிரு படலம் நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது போலும்.

இலக்கியம்

தொகு

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் நல்கிய பரிசுடன் மீளும் புலவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் கடல் வற்றிப்போனால் என்ன? கதிரவன் தெற்கில் தோன்றினால் என்ன? சோழன் நிழல் எனக்கு இருக்கிறது – எனப் பெருமித்த்தோடு பாடுகிறார். எனவே இது ‘கடைநிலை விடை’ என்னும் துறையாகும். ‘வைகறை அரவம் கேளியர்! பலகோள் செய்தார் மார்ப! எழுமதி துயில்’ என தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி நெடுங்கடைத் தோன்றியேனே – நல்கியோனே. [1]

அடிக்குறிப்பு

தொகு
  1. புறநானூறு 397
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடைநிலை_விடை&oldid=3938721" இலிருந்து மீள்விக்கப்பட்டது