கடோலினியம்(III) ஐதராக்சைடு

வேதிச் சேர்மம்

கடோலினியம்(III) ஐதராக்சைடு (Gadolinium(III) hydroxide) Gd(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதன் நுண் துகள்கள் டிக்லோபெனாக், இபுபுரோபென் மற்றும் நாப்ராக்சன் போன்ற பல்வேறு மருந்துகளின் ஓர் அடுக்காக இருப்பதற்கு சாத்தியமான பயன்பாட்டைக் கொண்டுள்ளன.

கடோலினியம்(III) ஐதராக்சைடு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
கண்டோலினியம் மூவைதராக்சைடு
வேறு பெயர்கள்
  • கண்டோலினியம்(III) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
ChemSpider 77048
InChI
  • InChI=1S/Gd.3H2O/h;3*1H2
பப்கெம் 4535411
பண்புகள்
Gd(OH)3
வாய்ப்பாட்டு எடை 208.3 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 307 °C (585 °F; 580 K)[1] (decomposes)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

கடோலினியம்(III) நைட்ரேட்டு சேர்மத்துடன் சோடியம் ஐதராக்சைடு காரத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து கடோலினியம்(III) ஐதராக்சைடு தயாரிக்கப்படுகிறது. இது போன்ற பல்வேறு தயாரிப்பு முறைகளும் உள்ளன:[1]

Gd(NO3)3 + NaOH → Gd(OH)3 + NaNO3

கடோலினியம்(III) ஐதராக்சைடை 307 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடேற்றினால் கடோலினியம்(III) ஆக்சைடு-ஐதராக்சைடாக (GdOOH) சிதைகிறது. தொடர்ந்து சூடுபடுத்தப்பட்டால் கடோலினியம்(III) ஆக்சைடாக சிதைகிறது.[1]

பயன்கள்

தொகு

காடோலினியம்(III) ஐதராக்சைடு வணிகரீதியான பயன்பாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், நச்சுத்தன்மை குறைவு[3] காரணமாக கடோலினியம்(III) ஐதராக்சைடு நுண் துகள்கள் பல்வேறு அழற்சி எதிர்ப்பு மருந்துகளுக்கு பூச்சு முகவராக பயன்படுத்தப்படுகிறது.[4] கடோலினியம்(III) நைட்ரேட்டுடன் கார அயனி பரிமாற்ற பிசின் சேர்ப்பதன் மூலம் இதன் நுண் துகள்கள் தயாரிக்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Logvinenko, V.; Bakovets, V.; Trushnikova, L. (2014). "Dehydroxylation kinetics of gadolinium hydroxide." (in en). Journal of Thermal Analysis & Calorimetry. 115 (1): 517-521. doi:10.1007/s10973-013-3274-1. 
  2. 2.0 2.1 Y. Kobayashi; H. Morimoto; T. Nakagawa; Y. Kubota; K.Gonda; N. Ohuchi (2016). "Fabrication of gadolinium hydroxide nanoparticles using ion-exchange resin and their MRI property" (in en). Journal of Asian Ceramic Societies 4 (1): 138-142. doi:10.1016/j.jascer.2016.01.005. 
  3. "Probing Cytotoxicity of Gadolinium Hydroxide Nanostructures" (in en). The Journal of Physical Chemistry B 114 (12): 4358-4365. 2010. doi:10.1021/jp911607h. 
  4. Yadong Xu; Alvaro Goyanes; Yuwei Wang; Andrew J. Weston; Po-Wah So; Carlos F. G. C. Geraldes; Andrew M. Fogg; Abdul W. Basit et al. (2018). "Layered gadolinium hydroxides for simultaneous drug delivery and imaging" (in en). Dalton Transactions 47 (9): 3166-3177. doi:10.1039/C7DT03729E. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோலினியம்(III)_ஐதராக்சைடு&oldid=3406214" இலிருந்து மீள்விக்கப்பட்டது